அனைத்து ஊழியர்களுக்கும் பிஎஃப் (PF) வசதியை வழங்கும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) இதற்காக, ஊழியர்களின் சம்பளத்திலிருந்து ஒரு சிறிய தொகையை பிடித்தம் செய்கிறது. இந்த தொகை ஊழியர்களின் ஓய்வுக்குப் பிறகு அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க உதவுகிறது. இது மட்டுமல்லாது PF கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும், பல நன்மைகள் உள்ளன.
EPFO-இன் நன்மைகள்:
1. இலவச காப்பீட்டு வசதி
உங்கள் பிஎஃப் கணக்கு தொடங்கியவுடன், இயல்பாகவே இலவச காப்பீட்டைப் (Insurance) பெறலாம். ஊழியர் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீட்டின் (ஈ.டி.எல்.ஐ) கீழ் ரூ .6 லட்சம் காப்பீடு கிடைக்கும். ஊழியர் பணிக்காலத்தில் இறந்தால், EPFO இன் செயலில் உள்ள பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர் அல்லது சட்டப்பூர்வ வாரிசுக்கு, ₹ 6 லட்சம் வரை மொத்த தொகை கிடைக்கும். இந்த நன்மையை நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசு தங்கள் ஊழியர்களுக்கு வழங்குகின்றன.
2. வரி சலுகைகள்:
வருமான வரியில் பணத்தை மிச்சப்படுத்த EPF மிகவும் எளிய மற்றும் சிறந்த வழி. EPF கணக்கு வைத்திருப்பவர்கள், வருமான வரியின் பிரிவு 80C இன் கீழ் தங்கள் சம்பளத்தில் 12% வரிகளை சேமிக்க முடியும். ஆனால் புதிய வரிவிதிப்பு முறையில் இந்த நன்மை நீக்கப்பட்டுள்ளது. ஆனாலும், உங்கள் வரியைக் கணக்கிடுவதற்கு பழைய வரி (Tax) முறையைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் இந்த நன்மையை நீங்கள் பெறலாம்.
3. ஓய்வு பெற்ற பின் ஓய்வூதிய நன்மை
EPFO ACT -இன் கீழ், ஊழியர்களின் அடிப்படை சம்பளம் மற்றும் கலுகைகளில் (Allowance) 12 சதவீதம் PF கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. இதேபோல், நிறுவனங்கள் அடிப்படை சம்பளம் மற்றும் சலுகைகள் (Allowance) ஆகியவற்றில் 12% பங்களிப்பு செய்கின்றன. இதில் 3,67% ஊழியர்களின் கணக்கிற்கும், மீதமுள்ள 8.33% ஊழியர்களின் ஓய்வூதிய திட்டத்திற்கும் செல்கிறது.
4. செயலற்ற கணக்கில் வட்டி
இதில் சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், நிலுவையில் இல்லாத (inactive) ஊழியர்களின் செயலற்ற பி.எஃப் கணக்குகளுக்கு வட்டி அளிக்கிறது. 2016 ஆம் ஆண்டில் இந்தச் சட்டத்தில் செய்யப்பட்ட மாற்றங்களின்படி மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக செயலற்ற நிலையில் இருக்கும், பி.எஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு கூட தொடர்ந்து வட்டி பெறுவார்கள். 2016-க்கு முன்பு மூன்று ஆண்டுகளாக செயலற்ற நிலையில் உள்ள கணக்குகளுக்கு வட்டி பெறுவதற்கான ஏற்பாடு இல்லை.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
விரைவில் வரப்போகுது பிஎஃப் வட்டி பணம்! மகிழ்ச்சியில் ஊழியர்கள்!