தன்னுடன் 10வருடங்களுக்கு மேலாக பணியாற்றிய 5 ஊழியர்களுக்கு ரூபாய் ஒரு கோடி மதிப்பிலான சொகுசு கார்களை சென்னையை சேர்ந்த மென்பொருள் நிறுவனத்தின் உரிமையாளர் பரிசாக வழங்கி ஆச்சரியப்பட வைத்துள்ளார். சென்னை ஓஎம்ஆர் சாலை கந்தன்சாவடியில் உள்ள உலக வர்த்தக மையத்தில் செயல்பட்டு வரும் கிஸ்ஃபிளோ என்ற ஐடி நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதன் தலைமை செயல் அதிகாரியும், நிறுவனருமான சுரேஷ் சம்பந்தம் முயற்சியில் இந்தியாவில் வருவாய் மற்றும் பிராஜெக்ட் அடிப்படையில் 10வது இடத்தில் இந்த நிறுவனம் இருப்பதாக கூறப்படுகிறது.
கார் பரிசு (Car Gift)
தலைமை நிர்வாக அதிகாரி(CEO) சுரேஷ் சம்பந்தமிடம் கேட்ட போது, ‘ கம்பெனி துவங்கியது முதல் தற்போது வரை என்னோடு பயணித்து வரும் ஊழியர்கள் எந்த சூழ்நிலையிலும், அதிக ஊதியம் தருவதாக கூறியும் என்னை விட்டு செல்லாமல் தொடர்ந்து உழைத்தனர். அதற்கு மதிப்பளிக்கும் வகையில் அவர்களை குடும்பதோடு கெட் டூ கெதர் பார்ட்டி இருப்பதாக வரவழைத்து அவர்களுக்கு கார் பரிசாக வழங்கி இருக்கிறோம். இதன் மதிப்பு சுமார் 1 கோடி என தெரிவித்தார்.
எப்படியாவது வாங்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்த கனவு காரை நனவாக்கி தனது சிஇஓ வாங்கிக் கொடுத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறிய ஆதி, ‘ என்னிடம் ஒரு முறை விளையாட்டாக கேட்டார் என்ன கார் பிடிக்கும் என்று, நானும் கூறினேன் ஆனால் அந்த காரையே பரிசாக வாங்கி கொடுத்திருக்கிறார் நான் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை என்றார்.
மேலும் படிக்க
சுற்றுலாத் தலமாகும் சர்வதேச விண்வெளி மையம்: இவ்வளவு செலவாகுமா?