அரசு விரைவு பேருந்துகளில் பயணிப்போருக்கு 10% கட்டண சலுகை வழங்கப்படும் என தமிழக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. இந்த சலுகை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
வெளியூருக்குச் செல்வோருக்கு விமானம், ரயில், பேருந்து உள்ளிட்ட போக்குவரத்து வசதிகள் உள்ளன. இருப்பினும், அவரவர் பொருளாதார நிலைக்கு ஏற்ப போக்குவரத்து வசதிகளை நாடுவர். இதில், ரயில் பயணத்திற்கு குறைந்த செலவு செய்வதுடன், முன்பதிவு பெட்டிகளில், சொகுசாக படுத்துக்கொண்டே செல்லும் வசதியை உள்ளடக்கியது.
எனவே பண்டிகைக் காலங்களில், ரயில் மற்றும் பேருந்து பயணம் மேற்கொள்வோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். இதனைக் கருத்தில் கொண்டு, சிறப்பு ரயில் மற்றும் பேருந்துகளை அரசு இயக்கும்.
அப்படி, தலைநகர் சென்னையில் இருந்து நெல்லை, கோவை, திருச்சி உள்ளிட்ட தொலைத்தூரங்களுக்கு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் விரைவுப் பேருந்துகள் (SETC)இயக்கப்பட்டு வருகின்றன.அண்டை மாநிலங்கள் உட்பட மொத்தம் 250க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இப்பேருநதுகள் நாள்தோறும் இயக்கப்பட்டு வருகின்றன.
10% கட்டணச் சலுகை
இப்பேருந்துகளில் பயணிப்போரை ஊக்குவிக்கும்விதமாக 10% கட்டண சலுகை அமல்படுத்தப்படும் என்று ஏற்கெனவே தமிழக அரசு அறிவித்திருந்தது.
அதன்படி இந்த அறிவிப்பு இனறு முதல் அமலுக்கு வருவதாக தமிழக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. அதேசமயம் ஆன்வைனில் இருவழிப் பயண டிக்கெட்டுகளை (UP And Down) முன்பதிவு செய்வோருக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சலுகை கிடையாது
மேலும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களிலும், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் பயணச் சலுகையில் பயணிப்போருக்கும் இந்த சலுகை பொருந்தாது என்றும அரசு அறிவித்துள்ளது.
பராமரிப்பு தேவை
இந்த கட்டணச் சலுகை வரவேற்கத்தக்கதுதான் என்றாலும், தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு இணையாக, தொலைத்தூரங்களுக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகள் அனைத்தும் முறையாக பராமரிப்பதும் அவசியம் என்பதே பயணிகளின் ஒற்றை கோரிக்கையாக உள்ளது.
மேலும் படிக்க...