Blogs

Sunday, 08 October 2023 03:58 PM , by: Muthukrishnan Murugan

Jersey number 69 Jarvo is back in worldcup

டேனியல் ஜார்விஸ் என்றும் அழைக்கப்படும், இங்கிலாந்தை சேர்ந்த யூடியூபர் கிரிக்கெட் ரசிகர்களுக்கு நல்ல பரீட்சயம். விறுவிறுப்பாக நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் போட்டிக்கு நடுவே அனைத்து பாதுகாப்புத் தடுப்புகளையும் மீறி உள்ளே புகுந்து ஒரு சில நிமிடத்தில் தனது குறும்பு நடவடிக்கையால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடுவார்.

இந்நிலையில் இன்று சென்னையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான உலகக்கோப்பை போட்டி நடைப்பெற்று வருகிறது. இப்போட்டியின் நடுவே மீண்டும் பாதுகாப்பு தடுப்புகளை மீறி ஜார்வோ ஆடுகளத்திற்குள் நுழைந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தியா விளையாடும் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு போட்டியில் ஜார்வோ படையெடுப்பது இது நான்காவது முறையாகும். 2021 ஆம் ஆண்டில், இந்திய அணி ஒரு டெஸ்ட் தொடருக்காக இங்கிலாந்துக்கு பயணம் செய்தபோது, ஜார்வோ தனது முதல் முறையாக லார்ட்ஸ் மைதானத்திற்குள் புகுந்த சம்பவம் மூலம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனார்.

லீட்ஸில் நடைப்பெற்ற அடுத்த போட்டியில், இந்திய அணிக்கு 2 விக்கெட் விழுந்த நிலையில் 4-வது வீரராக கோலி களமிறங்குவதற்கு முன்பாக கையில் பேட்டுடன் களமிறங்கி அதிர்வலைகளை ஏற்படுத்தினார் ஜார்வோ. அதனைத் தொடர்ந்து கென்னிங்டன் ஓவலில் நடைப்பெற்ற டெஸ்ட் போட்டியின் போது உள்ளே புகுந்த யூடியூபர் ஜார்வோ ஜானி பேர்ஸ்டோவுடன் மோதிய காட்சிகள் பேசுப் பொருளாகியது. இவரை நிரந்தரமாக கிரிக்கெட் போட்டி நடைப்பெறும் மைதானத்திற்குள் அனுமதிக்கக் கூடாது என பலர் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்தனர்.

இருப்பினும் இவரின் குறும்புத்தன நடவடிக்கைக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகியது என்பது தான் உண்மை. இந்நிலையில் தான் இந்தியாவில் நடைப்பெறும் 2023 ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியிலும் காட்சியளித்து இணையத்தை அதிர வைத்துள்ளார் ஜார்வோ.

இந்தியா தனது முதல் போட்டியில் இன்று ஆஸ்திரேலியா அணியுடன் மோதுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று களத்திற்குள் நுழைந்து கே.எல்.ராகுல், விராட் கோலியுடன் ஜார்வோ அரட்டை அடிக்கும் காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது. அத்துமீறி உள்ளே நுழைந்த ஜார்வோவினை சேப்பாக்கத்திலுள்ள பாதுகாப்பு படையினர் மைதானத்தில் இருந்து வெளியேற்றினர்.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி இப்போட்டியில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட சுப்மன் கில் இப்போட்டியில் களமிறங்கவில்லை. அதே நேரத்தில் ஆடும் அணியில் தமிழகத்தை சேர்ந்த ஆல்-ரவுண்டர் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார்.

10 அணிகள் பங்கேற்று விளையாடும் இந்த உலகக்கோப்பை போட்டி தான் ஏறக்குறைய விராட் கோலி மற்றும் ரோஹிட் ஷர்மாவின் இறுதி ஒருநாள் உலகக்கோப்பை போட்டியாக இருக்கும் எனக்கருதப்படுவதால் இந்திய அணி நிச்சயம் இதில் கோப்பை வெல்லும் என்கிற நம்பிக்கையில் இந்திய ரசிகர்கள் உள்ளனர்.

இதையும் காண்க:

கொட்டித் தீர்க்க காத்திருக்கும் கனமழை- 13 மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை

மஞ்சள் வீரன் TTF வாசனுக்கு வந்த சோதனை- அடுத்த 10 வருஷம் நோ பைக்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)