சென்னை ஐஐடி காலியாக உள்ள பல பணியிடங்களுக்கு விரைவில் ஆட்கள் நியமிக்கப்பட உள்ளனர். எனவே விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கல்வி நிறுவனமான இந்திய தொழில்நுட்ப கழகத்தின் சென்னை பிரிவில் திட்ட உதவியாளர், திட்ட மேலாளர், இளநிலை நிர்வாகி உள்ளிட்ட பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 10 காலியிடங்கள் நிரப்பட உள்ளன.
Project Manager
காலியிடங்கள் : 3
கல்வித் தகுதி (Education Qualification)
B.Tech /B.E in Civil Engineering. மற்றும் 5 வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பளம் (Salary)
ரூ.27,500 – 1,00,000
Project Associate
காலியிடங்கள்: 3
கல்வித் தகுதி (Education Qualification)
B.Tech /B.E in Civil Engineering. மற்றும் 2 வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பளம் (Salary|)
ரூ.21,500 – 75,000
Junior Executive
காலியிடங்கள் : 4
கல்வித் தகுதி (Education Qualification)
Diploma in Civil Engineering அல்லது ஏதேனும் ஒரு டிகிரி படிப்பு மற்றும் 1 வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பளம் (Salary)
ரூ.16,000 – 50,000
தேர்வு செய்யப்படும் முறை (Selection Process)
இந்த பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை(How to apply)
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://icandsr.iitm.ac.in/recruitment/ என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி (Deadline)
15.14.2022
மேலும் படிக்க...
கோடை வெயிலைக் கொளுத்திவிட- தினமும் 4 புதினா இலைகள்!
லட்சம் ரூபாயை எட்டிய பஞ்சு விலை- ஜவுளித்துறை முடங்கும் அபாயம்!