Blogs

Sunday, 21 August 2022 08:50 AM , by: Elavarse Sivakumar

தமிழ்நாட்டில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் காலியாக உள்ளப் பணியிடங்கள் விரைவில் புதிய ஆட்கள் மூலம் நிரப்பப்பட உள்ளது. எனவே விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் தவறாமல் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் இளநிலை எழுத்தர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 7 காலியிடங்கள் நிரப்பட உள்ளன.

Lower Division Clerk

கல்வித் தகுதி (Educational Qualification)

ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். தட்டச்சு மற்றும் கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் (Salary)

ரூ. 19,500 – 62,000

Safaiwala

கல்வித் தகுதி (Educational Qualification)

8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம் (Salary)

ரூ. 15,700 – 50,000

Male Nursing Assistant

கல்வித் தகுதி (Educational Qualification)

Diploma in Nursing and Midwifery படித்திருக்க வேண்டும். 3 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம் (Salary)

ரூ. 15,700 – 50,000

வயது தகுதி(Age Limit)

01.06.2022 அன்று 20 முதல் 30 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். OBC பிரிவினருக்கு வயது வரம்பில் 3 ஆண்டுகள் தளர்வு உண்டு.

தேர்வுக் கட்டணம் (Fee)

ரூ.150. இருப்பினும் எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

தேர்வு செய்யப்படும் முறை (Selection Process)

எழுத்துத் தேர்வு மற்றும் திறனறி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை (How to apply)

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://wellington.cantt.gov.in/recruitment/ என்ற இணையதளத்தில் APPLICATION TEMPLATE IN EXCEL FORMAT என்பதை கிளிக் செய்து விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மின்னஞ்சல் முகவரி:cbwell.rect@gmail.com

மேலும் படிக்க...

விடாது துரத்தும் காகங்கள்- தலையில் கொத்துவதால் அலறும் பெண்மணி!

கத்திரிக்காயை பச்சையாக கடித்துக் காண்பித்த பெண் எம்.பி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)