Blogs

Friday, 03 September 2021 07:25 AM , by: Elavarse Sivakumar

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மூத்த ஆராய்ச்சியாளர் உள்ளிட்டப் பணியிடங்களுக்கு விரைவில் ஆட்கள் நியமனம் நடைபெற உள்ளது. எனவே, விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்கள் நியமனம் (Appointment of persons)

கோவையில் இயங்கி வரும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (Tamil Nadu Agricultural University) நிறுவனமானது 2021 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் 2021 ஆம் ஆண்டு ஆட்சேர்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான நேரடி அதிகாரபூர்வ அறிவிப்பை, புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் தங்களுக்கான அறிவிப்பாகக் கருதலாம்.

விண்ணப்பிக்கும் முறை (How to apply)

இந்த அறிவிப்பின்படி 2021 ஆம் ஆண்டிற்கான டி.என்.ஏ.யு ஆட்சேர்ப்பில் இந்தியா முழுவதும் மொத்தம் 07 காலியிடங்கள் உள்ளன. இந்த காலியிடங்கள் குறித்த முழு தகவல்களையும் இணையதளத்தில் பெற முடியும். இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க https://tnau.ac.in/ என்ற டி.என்.ஏ.யுவின் அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும்.

விண்ணப்பிப்பதற்கான முழு விவரங்கள் மற்றும் தகுதிகளை அறிந்துக்கொண்டப் பிறகு, விண்ணப்பிப்பதற்கான இறுதி தேதிக்கு முன்பாக தகுதியான பணிக்கு விண்ணப்பிக்கவும்.

மூத்த ஆராய்ச்சியாளர் (Senior Research Fellow)

டி.என்.ஏ.யு நிறுவனமானது சமீபத்தில் மூத்த ஆராய்ச்சியாளர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 17.09.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.

வேலை அறிவிப்பு விவரங்கள்

நிறுவனம்

டி.என்.ஏ.யு

பணி (Job)

மூத்த ஆராய்ச்சியாளர்

கல்வித் தகுதி (Education qualification)

அங்கீகரிக்கப்பட்ட வேளாண் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி (அக்ரி) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வேலைக்கான இடம் (Place of work)

கோயம்புத்தூர்

காலியிடங்கள் (Vacancies)

02

சம்பளம் (Salary)

ரூ 25,000 முதல் – ரூ 31,000 வரை (மாத சம்பளம்)

காலக்கெடு (Last Date)

14.09.2021

பணி

கள ஆய்வாளர்

கல்வித் தகுதி

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி (அக்ரி) / Horti / பி.எஸ்.சி (ஏ.பி.எம்) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வேலைக்கான இடம் (Place of work)

கோயம்புத்தூர்

காலியிடங்கள் (Vacancies)

02 

சம்பளம் (Salary)

ரூ 15,000 (மாத சம்பளம்)

விண்ணப்பிக்க இறுதி தேதி (Last Date)

07.09.2021

எனவே, விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

விவசாயம்: ரூ. 5 லட்சத்தில் டாப் 10 டிராக்டர்கள்! முழு விவரம்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)