Blogs

Monday, 05 September 2022 09:47 PM , by: Elavarse Sivakumar

நாகப்பட்டினம் மாவட்ட நீதித்துறையில் காலியாக உள்ள 22 பணியிடங்களுக்கு விரைவில் ஆட்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நாகப்பட்டினம் மாவட்ட நீதித்துறையில் காலியாக உள்ள தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. . இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 09.09.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

தட்டச்சர் (Typist)

கல்வித் தகுதி (Educational Qualification)

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி (Age Limit)

01.07.2022 அன்று அதிகபட்ச வயது SC/SCA/ST – 35, MBC/BC/BCM – 32, OC -30

சம்பளம் (Salary)

ரூ. 19,500 – 62,000

சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno – Typist)

கல்வித் தகுதி (Educational Qualification)

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி (Age Limit)

01.07.2022 அன்று அதிகபட்ச வயது SC/SCA/ST – 35, MBC/BC/BCM – 32, OC -30

சம்பளம் (Salary)

ரூ. 20,600 – 65,500

தேர்வு முறை (Selection)

இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை (How to apply)

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://districts.ecourts.gov.in/sites/default/files/Recruitment%202022.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்கு கீழே உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் செய்துக் கொள்ளவும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான சான்றுகளை இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி (Address)

முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், நாகப்பட்டினம்

விண்ணப்பிக்க கடைசி தேதி

09.09.2022

மேலும் படிக்க...

4 வயது குழந்தைகள் வேலைக்குத் தேவை - வித்தியாசமான விளம்பரம்!

பிள்ளையாருக்கு ரூ.316 கோடிக்கு காப்பீடு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)