இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 21 June, 2021 8:29 PM IST
Credit : Jagran Josh

இந்தியாவின் பெருமைகளில் ஒன்றான யோகாவை உலகமே கொண்டாடும் நாளாக இன்று (ஜூன் 21) அமைந்துள்ளது. ஏழாவது ஆண்டாக உலக யோகா தினம் (World Yoga Day) இன்று கொண்டாடப்படுகிறது. இந்தத் தருணத்தில் யோகா என்னும் சொல்லையும் அதன் பின்னணியில் உள்ள கருத்தையும் கொஞ்சம் கவனிக்கலாம். யோகா அல்லது யோகம் என்பது கையைக் காலைத் தூக்குவதோ, உடலை வளைப்பதோ மூச்சைப் பிடிப்பதோ அல்ல. யோகா என்ற பெயரில் பொதுவாக நாம் செய்வதெல்லாம் யோகாசனம்.

யோகா

யோகா என்னும் சொல்லின் வேர்ச் சொல் யுஜ். இதன் பொருள் இணைதல். ஜீவாத்மாவும் பரமாத்மாவும் இணைதல். எல்லைக்கு உட்பட்ட இயற்கையும் எல்லையற்ற இயற்கையும் இணைதல். மனிதன் கடவுளுடன் இரண்டறக் கலத்தல். இந்த இணைப்புதான் யோகம். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பதஞ்சலி என்னும் முனிவர் படைத்தது தான் யோக சாஸ்திரம். இதில் யோகம் என்பதை அவர் தெளிவாக விளக்கியிருக்கிறார். இந்த நூல் தமிழிலும் உள்ளது. பாரதியாரும் (Bharathiyar) இதை எளிமையாகவும் உரிய விளக்கங்களுடனும் தமிழில் தந்திருக்கிறார். பரம்பொருளுடன் இணைதல் என்பது ஆன்மிகவாதிகளின் லட்சியம்.

பலவித யோகாசனங்கள்

பத்மாசனம், வஜ்ராசனம், சர்வாங்காசனம் எனப் பல ஆசனங்கள் உடலை நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு உதவுபவை. விசையுறு பந்தினைப் போல் மனம் வேண்டியபடி செல்லும் உடல் கேட்டேன் என்று பாரதியார் சொல்கிறார். அத்தகைய உடலைப் பெற ஆசனங்கள் உதவும்.

அடுத்தது பிராணாயாமம் என்னும் மூச்சுப் பயிற்சி. முறையாக மூச்சுப் பயிற்சி செய்தால் அது மூச்சை மட்டுமல்லாமல் மனதையும் ஒரு நிலைக்குக் கொண்டுவரும். ஆரோக்கியம் கூடும். விழிப்புணர்வு (Awarness) அதிகரிக்கும். களைப்பு அண்டாத நிலை ஏற்படும்.

அடுத்தது பிரத்யாஹாரம். இது வாழ்வில் சில விஷயங்களைத் துறப்பதற்கான பயிற்சி. உலக விவகாரங்களிலிருந்து, ஆபாசங்களிலிருந்து ஒதுங்கி மனக் கட்டுப்பாட்டுடன் வாழுதல்.

Credit : Samayam

அடுத்தது தாரணை. நடத்தை, பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை நெறிப்படுத்திய பிறகு, உடலையும் மனத்தையும் வசப்படுத்திய பின் இறைவனை (God) நினைத்து அந்தச் சிந்தனையிலேயே லயிக்கும் பயிற்சியைச் செய்யலாம். அதுதான் தாரணை. ஒரு புள்ளியிலேயே மனதைக் குவிக்கும் பயிற்சி.

யோகம் என்பது மனதில் தோன்றும் எழுச்சிகளை அடக்குதல் அல்லது நிறுத்துதல் என்று பொருள். மனம் நிச்சலனமாக இருக்கும் நிலை. ஆழ்கடலின் அமைதி ஆகும்.

ஆகவே, யோகா என்பது வெறும் உடற்பயிற்சி (Excercise) அல்ல. ஆன்மிக நம்பிக்கை கொண்டவர்களின் இறுதி இலக்கான மோட்சத்தை அடைய உதவும் கருத்து, செயல்முறை. பக்தியின் மூலம் யோகம் (இறைவனோடு இணைதல்), கர்மாவின் மூலம் யோகம், ஞானத்தின் மூலம் யோகம் என்று பல விதமான யோகங்கள் உள்ளன. ராஜ யோகமும் அதில் ஒன்று. யோகாசனம் அதில் ஒரு பகுதி.

யோகாசனங்களை முறையாகச் செய்வதன் மூலம் பெருமளவில் நோயற்ற வாழ்வு வாழ முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதன் பலன்களை அனுபவபூர்வமாக உணர்ந்ததாலேயே வெளிநாட்டினரும் யோகாசனங்களுக்கு முக்கியத்துவமும் மதிப்பும் அளிக்கிறார்கள். கொரோனா (Corona) போன்ற புதிய கிருமிகளின் பாதிப்புகளைக் குறைப்பதற்கும் யோகாசனம், மூச்சுப் பயிற்சிகள் ஆகியவை பயன்படுகின்றன.

மதச்சார்பற்ற வழிமுறை

ஆன்மிக ரீதியாகவும் வாழ்வை நெறிப்படுத்தும் கருவியாகவும் ஆழமான பொருளும் விரிவான பலன்களும் கொண்ட யோகாசனங்களை முறையாகவும் தொடர்ச்சியாகவும் செய்துவருவது நல்லது. ஆன்மிக நாட்டமோ கடவுள் நம்பிக்கையோ இல்லாதவர்களும் யோகாசனம், மூச்சுப் பயிற்சி ஆகியவற்றைச் செய்யலாம். மதச்சார்பற்ற விதத்திலும் இவை இரண்டையும் பயிற்சி செய்யலாம். இவை நம்பிக்கைகளையோ மந்திரங்களையோ பிரார்த்தனையையோ சார்ந்தவை அல்ல என்பதால் எல்லா மனிதர்களுக்கும் உரியவையாக உள்ளன.

மேலும் படிக்க

தினமும் ஒரு பச்சை வெங்காயம்: நன்மைகளோ ஏராளம்!

வேளாண்துறையின் முழுமையான வழிகாட்டுதல் இருந்தால் காய்கறிகள் வீணாகாது!

English Summary: June 21 is World Yoga Day! A look!
Published on: 21 June 2021, 08:29 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now