முதலீடுகள் என்றாலே எல்லோரும் பயப்படுவதற்கு ஒரே காரணம் அதில் அதிகத்தொகையை முதலீடு செய்ய வேண்டுமோ? என்ற அச்சம்தான். அதிலும் குறிப்பாக அதிகம் முதலீடு செய்து அதில் லாபத்திற்குப் பதில் நஷ்டம் ஏற்பட்டால் என்ன செய்வது என்பதுதான்.
ரூ.100 முதலீ‘டு
ஆனால் அவ்வளவு பயம் தேவை இல்லை. ஏனெனில், நீங்கள் நினைப்பது போன்று அதிகப் பணமும் தேவையில்லை. 100 ரூபாய் முதலீட்டில் கூட நீங்கள் உங்கள் வருங்காலத்திற்காகச் சேமிக்க முடியும்.
மியூச்சுவல் ஃபண்ட்
அப்படியொரு திட்டத்தை கடந்த இரண்டு வருடங்களாக மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களும் கொண்டு வந்துள்ளன. தீம் ஃபண்ம் என்பது, ஆண்டொன்றுக்குச் சராசரியாக 13% முதல் 26% வரை லாபத்தை அளித்து வருகிறது.
ஐசிஐசிஐ ப்ருடெண்ஷியல் குவாண்ட் ஃபண்ட் (ICICI Prudential Quant Fund - Direct Plan):
ஐசிஐசிஐ ப்ருடெண்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தால் 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது ஒரு திறந்த நிலை குறைந்த சந்தை அபாயங்கள் கொண்ட ஃப்ண்டாகும். இந்த ஃபண்டானது விவசாயத்துறைகள், தொழிற்சாலைகள் மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற நிறுவனங்களில் கலப்பின முறையில் முதலீடு செய்யும் ஒரு ஈக்விட்டி ஃபண்டாகும்.
23% மேல் சராசரி லாபம்
இந்த ஃபண்டிற்கான குறைந்தபட்ச SIP முதலீடு ரூ.100 ஆகும். அதே லம்ப்சம் முறை எனில் ரூ.1000 ஆகும். இந்த ஃபண்டில் SIP முதலீடுகளில் அவ்வளவாக லாபம் இல்லை. ஆனால் நீங்கள் லம்ப்சம் (Lumpsum) முறையில் மாதந்தோறும் 1000 ரூபாய் முதலீடு செய்தால் 5 வருடத்தில் பல் லட்சங்களை லாபமாகப் பெறலாம். ஏனெனில் இந்த ஃபண்ட் ஆண்டுதோறும் 23% மேல் சராசரி லாபத்தை வழங்கி வருகிறது.
மேலும் படிக்க...
அதிவேகமாக பரவும் ஃபுளூ வைரஸ் - தற்காத்து கொள்வது எப்படி?
ஓய்வூதிதாரர்களுக்கு அரசின் முக்கிய அறிவிப்பு- 10 நாட்கள் மட்டுமே அவகாசம்!!