மதுபிரியர்களுக்குப் புதுவித அனுபவத்தை அளிக்கும் வகையில், இந்தப் புது வகை மது விற்பனைக்கு வந்துள்ளது. குடிக்க வேண்டாம், நுகர்ந்தாலே போதும். விலை எவ்வளவு தெரியுமா? வெறும் ரூ.70 லட்சம்தான்.
உடல் நலத்திற்கு கேடு (Harm to health
எத்தனைதான் உடல் நலத்திற்குக் கேடு என மருத்துவர்கள் அறிவுறுத்தி வந்தாலும், மதுவின் பக்கம் மயங்கி விழுபவர்கள் பட்டியல் எப்போதுமே நீண்டுகொண்டுதான் செல்கிறது. எனினும் எதுவும் அளவுடன் இருக்கும் வரை, ஆரோக்கியம் நம் கையில், அளவுக்கு மிஞ்சினால் நம் உயிர் அதன் கையில் என்பதை உணர வேண்டியது கட்டாயம்.
புதிய வகை மது (New type of wine)
மருத்துவ ரீதியிலான இவ்வகை அச்சுறுத்தல்கள் ஒருபுறம் என்றால், மதுப்பிரியர்களை மகிழ்ச்சியில் திளைக்க வைப்பதுடன், மதுவின் மூலம் புதுவித அனுபவத்தை அளிப்பதற்காக சிங்கப்பூரில் விற்பனைக்கு வந்துவிட்டது புதிய வகை மது.
நுகர்ந்தாலே போதை தரும் மதுவகை ஒன்று சிங்கப்பூரில் உள்ள பிரபல விமான நிலையத்தில் விற்கப்படுகிறது. இதன் விலை வெறும் ரூ.70 லட்சம் தான்.
கொரோனா 2-வது அலை உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் வீடுதோறும் நீராவி பிடிப்பது பிரபலமானது. நீராவி பிடிப்பது கொரோனா பரவுவதில் இருந்து தடுக்காது என சுகாதாரத்துறையும் மருத்துவர்களும் விளக்கியும் கூட தொற்று பரவல் தணியும் வரை பல வீடுகளில் நீராவி பிடிப்பது நின்றபாடில்லை.
நுகர்ந்தாலேப் போதும் (Enough to consume)
இந்த சூழலில் நீராவிப்பிடிப்பதை ஒத்த இந்த மதுவை விற்பனை செய்வது சரியானதாக இருக்கும் எனக் கருதி, இந்த நிறுவனம் புதிய வகை மதுவை விற்பனை செய்கிறது. இந்த மதுவின் நீராவியை நுகர்ந்தாலேப் போதும், போதைக் கிறுக்கேறும் என்றால் நம்ப முடிகிறதா..???? நம்பித்தான் ஆக வேண்டும்.
சிங்கப்பூரில் உள்ள ஷாங்கே சர்வதேச விமான நிலையத்தில் தான் இந்த மதுபானம் விற்கப்படுகிறது. இதன் விலையைக் கேட்டால் இன்னும் ஷாக்காகி விடுவீர்கள். விலை வெறும் ரூ.70 லட்சம் மட்டும்தான். இந்த மதுவை அனைவராலும் வாங்க இயலாது. 50 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு மட்டுமே விற்கப்படுகிறது.
இந்த மதுவை வாங்கும் நபர்களுக்கு மட்டும் சுவைத்துப் பார்க்க சிறிதளவு வழங்கப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க...
தரிசு நிலங்களைச் சாகுபடி நிலங்களாக மாற்ற விவசாயிகளுக்கு மானியம்!
வீடு தேடி வரும் விவசாய உபகரணங்கள்- அமேசானின் அசத்தல் ஏற்பாடு!