பிஎஃப் அமைப்பானது அவர்களது பயனாளர்களுக்கு ஏற்ற வகையில் தற்போதைய காலத்திற்கு ஏற்ப வழிமுறைகளை செயல்படுத்தி மாற்றி அமைத்து வருகிறது. அந்த வகையில் பி எப் பயனாளிகள் அவர்கள் கணக்கு கொண்டு இணையத்தின் மூலமே அவர்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.
PF பணம் (PF Money)
பிஎஃப் பணம் எவ்வளவு உள்ளது என தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் முதலில் http://www.epfinida.gov.in என்ற இனத்திற்குள் செல்ல வேண்டும்.
அவர் சென்ற பிறகு உங்கள் பி எப் தொகையை காண நினைத்தால் அதற்குரிய பேலன்ஸ் காட்டும் பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
உடனடியாக அந்த தரமானது புதிய பக்கத்திற்கு செல்லும்.
அவ்வாறு சென்றவுடன் உங்களுடைய பிஎஃப் உறுப்பினர் தகவலை கொடுக்க வேண்டும்.
பின்பு நீங்கள் இருக்கும் மாநிலம் அலுவலகம் என அங்கு கேட்கப்படும் அனைத்திற்கும் பதில் அளித்து முடிவு பொத்தான் அதாவது சப்மிட் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
இறுதியில் உங்கள் பிஎஃப் கணக்கில் இருக்கும் தொகை குறித்து விவரங்களை உங்களுக்கு தெரிவிக்கும்.
அதேபோல எஸ்எம்எஸ் மூலமாகவும் உங்கள் பிஎப் இல் உள்ள இருப்பு தொகையை சரிபார்த்துக் கொள்ள முடியும்.
நீங்கள் முதலில் PF ல் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணில் இருந்து EPFOHO UAN என்ற செய்தியை அனுப்ப வேண்டும். இவ்வாறு அனுப்பிய உடன் நீங்கள் பதிவு செய்துள்ள எண்ணிற்கு உங்கள் பி எப் இருப்பு தொகை குறித்து முழு தகவலும் குறுஞ்செய்தியாக திருப்பி அனுப்பப்படும்.
மேலும் படிக்க