தங்கம் விலை தற்போது, ராக்கெட் வேகத்தில் அதிகரித்துவருவதால், நடுத்தரவர்த்தக்கத்தினருக்கு, தங்க நகை வாங்குவது என்பது கடினமான இலக்காக மாறி வருகிறது. ஏனெனில் இன்று ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலையானது ரூ.40,000 தாண்டி சென்று கொண்டுள்ளது.
ஆக, இந்த இலக்கை எளிதில், எட்ட மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது பெரிய அளவில் உதவும். ஏனெனில், இதில் ரூ.1000 முதலீடு செய்தால் 40% வரை லாபம் கிடைக்கும்.
மியூச்சுவல் ஃபண்ட்
மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யப் பெரிய தொகை தேவையில்லை.
உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்கு நகை சேர்க்க விரும்பினால் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் மாதந்தோறும் 1000 ரூபாயை SIP முறையில் முதலீடு செய்து வந்தால் 3 வருடங்களில் 70,000 ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.
40% மேல் லாபம்
சமீபகாலமாக டெட் ஃபண்டில் ஆதித்யா பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் Aditya Birla Sun Life Medium Term Plan எஸ்ஐபி திட்டம் கடந்த ஓராண்டில் 40% மேல் லாபத்தை அதன் முதலீடுகள் மீது அளித்துள்ளது.
ரூ.1000 முதலீடு
இந்த மியூச்சுவல் ஃபண்ட் வகை டெட் ஃபண்ட் வகையைச் சேர்ந்ததாகும். இந்த ஃபண்டிற்கான குறைந்தபட்ச SIP முதலீட்டு தொகை ரூ.1000 ஆகும். இந்த ஃபண்ட சந்தை அபாயங்கள் குறைந்த அதிக லாபம் தந்த சேமிப்புத் திட்டமாக ரேட்டிங் செய்யப்பட்டுள்ளது.
ரூ.4,800 லாபம்
இந்த ஃபண்டில் நீங்கள் சென்ற வருடம் முதல் ரூ.1000 முதலீடு செய்திருந்தால் ஒரு வருட முடிவில் 40% லாபம் எனில் இன்று உங்களுக்கு ரூ.16,800 (ரூ.4,800 லாபம்) கிடைத்திருக்கும். இந்த ஃபண்டில் நீங்கள் 3 வருடம் தொடர்ந்து மாதம் ரூ.1000 முதலீடு செய்து வந்தால் கண்டிப்பாகத் தங்க நகையை வாங்க முடியும்.
மேலும் படிக்க...
ஒரு சரக்கு வாங்கினால், 2 பாட்டில் இலவசம் - குஷியில் குடிமகன்கள்!
கூழ் காய்ச்சும் போது வலிப்பு -பாத்திரத்தில் விழுந்து இளைஞர் மரணம்!