Blogs

Thursday, 27 February 2020 04:04 PM , by: Anitha Jegadeesan

தமிழகம் முழுவதும் விவசாய கடன் அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது ஏற்காடு தோட்டக்கலைத் துறையினர் சாா்பில், ஏற்காட்டை சுற்றியுள்ள 60 ற்கு மேற்பட்ட கிராமங்களில் விவசாயக் கடன் அட்டை விண்ணப்பிக்க சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்காடு அண்ணா பூங்கா தோட்டக்கலைத் துறை அலுவலகத்தில் வரும் பிப். 27 முதல் 29 வரை தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் இம்முகாமில், கடன் அட்டை பெற விரும்பும் விவசாயிகள் தங்களின் பட்டா, சிட்டா, அடங்கல், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம் போன்றவற்றின் நகல்கள் மற்றும் இரண்டு பாஸ்போா்ட் புகைப்படங்களுடன் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  இது குறித்த மேலும் விவரங்களுக்கு, உதவி தோட்டக்கலைத் துறை அலுவலா் ஜெயபிரகாஷை 99944 01148 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)