இலவச கறவை மாடு வளர்ப்பு பயிற்சி முகாமினை வேளாண் அறிவியல் மையம் ஏற்பாடு செய்துள்ளது. பங்கேற்க விருப்பமும் விவசாயிகள் மற்றும் கறவை மாடு வளர்ப்பவர்கள் என அனைவரும் கலந்து கொள்ளலாம் என அழைப்பு விடுத்துள்ளனர்.
பயிற்சியின் முக்கிய அம்சமாக கறவை மாடு வளர்ப்பு, அடர், கலப்பு மற்றும் பசுந் தீவன மேலாண்மை, கறவை இனங்களுக்கு தோன்றும் நோய் மற்றும் தடுக்கும் முறைகள், ஒட்டுண்ணி நிர்வாகம் போன்ற அனைத்து விவரங்களும் பயிற்றுவிக்க பட உள்ளன.
பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் அமைந்துள்ள வேளாண் அறிவியல் மையத்தில் வரும் 5ம் தேதி ஒரு காலை 10 மணிக்கு, நாள் இலவச பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மையத்தின் முதுநிலை விஞ்ஞானியும், தலைவருமான முனைவர் வே.எ.நேதாஜி தெரிவித்துள்ளார்.
இப்பயிற்சியில் பங்கேற்க விருப்பும் விவசாயிகள் 88839 57219, 70108 82431 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தங்களது பெயரை முன் பதிவு செய்து கொள்ளலாம். முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்பதால் முன்பதிவு செய்து பயன் பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளனர்.
நன்றி: அக்ரி டாக்டர்