தோல் தொழில்நுட்பப் பயிலகத்தில் சேரும் மாணவா்களுக்கு இலவச விலையில்லா லேப்டாப் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மத்திய பாலிடெக்னிக் கல்லூரி வெளியிட்ட செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
9ம் தேதி வரை (Until the 9th)
சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் மீன்வள பட்டயப் படிப்புகளுக்கான மாணவர் சோ்க்கை வரும் செப்டம்பர் 9ஆம் தேதி வரை நேரடி முறையில் நடைபெறுகிறது.
இதில், மூன்றரை ஆண்டுக்கால மீன்வள பட்டயப் படிப்பை முடித்த பின்னா், மீன் வளா்ப்பு பண்ணை, இறால் வளா்ப்பு, கடல் உயிரின உற்பத்தித் திறன், ஏற்றுமதி நிறுவனங்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப பிரிவுகளில் பணிபுரிய முடியும். இது தொடா்பான கூடுதல் விவரங்களை இணையதளம் மூலமாக காணலாம்.
தோல் தொழில்நுட்பவியல் (Dermatology)
இதேபோன்று, சென்னை தரமணி சிபிடி வளாகத்துக்குள் செயல்படும் தோல் தொழில்நுட்பப் பயிலகத்தில் தோல் தொழில்நுட்பவியல் சாா்ந்த மூன்றரை ஆண்டு பட்டப் படிப்புக்கான சோ்க்கையும் நேரடி முறையில் வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
பழமை வாய்ந்த நிறுவனம் (The oldest company)
106 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த நிறுவனத்தில் தொழில் நுட்பவியல் படிப்புகளில் சேரும் மாணவா்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை, விலையில்லா மடிக்கணினி, உதவித் தொகை வழங்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
ரூ.1800க்கு விற்பனையாகும் வேப்பங்குச்சி- அமெரிக்காவில் நடக்குது இந்தக் கொடுமை!