சொந்த வீடு என்பது நம்மில் பலரது கனவு. இதனை அடைய நாம் எடுக்கும் முயற்சிகளுக்கு அமோக வெற்றி கிடைக்கிறது. அவ்வாறு இந்த ஆண்டிற்குள் வீடு வாங்க வேண்டும் எனத் திட்டமிட்டு, அவசரமாக வீடு தேடிக் கொண்டிருப்பவரா நீங்கள்? அப்படியானால் உங்களுக்கு அரசு தருகிறது ரூ.1.50 லட்சம் வரிசலுகை. இந்த வரிச்சலுகையைப் பெற இன்னும் 20 நாட்களே எஞ்சியுள்ளன.
எனவே புதிதாக வீடு வாங்குவோர் இம்மாதம் 31ஆம் தேதிக்குள் அந்த வேலையை முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் வரி சலுகை கிடைக்காது.
2021 மத்திய பட்ஜெட்டில் வருமான வரி சட்டம் 80EEA-இன் கீழ் வீடு வாங்குவோருக்கான வரிச் சலுகை நீட்டிக்கப்பட்டது. அதாவது, 2022 மார்ச் 31ஆம் தேதி வரையில் வீடு வாங்குவோர் தங்களது வீட்டுக் கடனில் ரூ.1.50 லட்சம் வரையில் வரிச் சலுகை பெறலாம்.
எவ்வளவுச் சலுகை?
இந்தக் காலக்கெடு இன்னும் சில வாரங்களில் முடியப் போகிறது. எனவே அதற்குள் வாடிக்கையாளர்கள் இச்சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
வீடு வாங்கும்போது அந்த வீட்டின் விலை ரூ.45 லட்சத்துக்குக் குறைவாக இருந்தால், அதற்கு வருமான வரிச் சலுகையாக ரூ.1.50 லட்சம் வரை கோரலாம்.
வீட்டுக் கடன் வட்டியைச் செலுத்துவதில் இச்சலுகை கிடைக்கும். 2021ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து, கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்ட 2022ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் இச்சலுகை நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதற்கான அறிவிப்பு வெளியாகாததால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். எனவே, 2022 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புதிதாக வீடு வாங்குபவர்கள் இனி அதிகமாக வருமான வரி செலுத்த வேண்டியிருக்கும்.
காலக்கெடு
வீடு வாங்குவோருக்கு இன்னும் மூன்று வாரங்களே காலக்கெடு உள்ளது. அதற்குள் புதிய வீட்டுக்கான ஒப்புதலைப் பெற்றுவிட்டால் ரூ.1.50 லட்சம் வரையில் வரிச் சலுகை பெறலாம். மார்ச் 31ஆம் தேதிக்குள் ஒப்புதல் பெற்று, அதைத் தாண்டி வீடு வாங்கினாலும் இச்சலுகையைப் பெறமுடியும். அதற்குள் இந்த வேலையை முடித்தால் நல்லது. புதிதாக வீடு வாங்குவோர் அதற்கான கடனுக்கு ஒப்புதல் பெறும்போது அவர்களது பெயரில் வேறு ஏதேனும் வீடு இருக்கக் கூடாது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...