சிரிப்பு வைத்தியம் கேள்விப்பட்டிருப்பீர்கள். சிரிப்பு போராட்டம் தெரியுமா?குண்டும் குழியுமான உள்ள சாலையைச் சீரமைக்கக்கோரி, வித்தியாசமான சிரிக்கும் போராட்டம் நடத்தப்பட்டது, மற்றவர்களிடையே வேடிக்கையாக அமைந்தது.
சேதமடைந்த சாலைகள் (Damaged roads)
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள அரவிந்த் நகர் பகுதியில் 200 மீட்டர் நீள சாலை, மிகவும் மோசமான நிலையில் சேதமடைந்துள்ளது.
குண்டும் குழியுமாக
இதனைச் சரிசெய்வதற்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னதாக மாநில அரசு சார்பில் 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, சாலை சீரமைப்பு பணிகளும் துவங்கின. ஆனால், எதிர்பாராதவிதமாக சில நாட்களிலேயே பணிகள் நிறுத்தப்பட்டதால், சாலை குண்டும் குழியுமாக மாறின.
வித்தியாசமான முயற்சி (Strange attempt)
சேதமடைந்த சாலையை இதுவரையில் சீரமைக்காததால், சாலையைச் சீரமைக்க வலியுறுத்தியும், அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாகவும், அப்பகுதி மக்கள் வித்தியாசமான முறையில் போராட முடிவு செய்துள்ளனர்.சேதம் அடைந்த சாலை அருகே அப்பகுதி மக்கள் வரிசையாக நின்றுக்கொண்டு, வயிறு குலுங்க சிரித்து 'சிரிப்பு போராட்டம்' நடத்தினர்.
அதிகாரிகள் கவனிப்பார்களா?
இவர்களது இந்தப் போராட்டம் மற்றவர்களுக்கு மாபெரும் வேடிக்கையாக மாறிப்போனது. அதிகாரிகளும் சிரித்துவிட்டுப் போகமால் இருந்தால் நல்லது என சிலர் விமர்சிக்கின்றனர்.
மேலும் படிக்க...
லட்சங்களை அள்ள சிறந்த வாய்ப்பு - உங்களிடம் 786 தொடரின் ரூபாய் நோட்டு இருந்தால்!