Blogs

Sunday, 12 December 2021 06:41 PM , by: R. Balakrishnan

LIC Jeevan Labh

எல்ஐசி நிறுவனம் இன்சூரன்ஸ் திட்டங்கள் மட்டுமல்லாமல் நல்ல வருமானம் தரக்கூடிய திட்டங்களையும் வழங்குகிறது. இதில், எல்ஐசி ஜீவன் லாபம் (LIC Jeevan Labh) திட்டத்துக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

பாதுகாப்பான திட்டம் (Safety Scheme)

இத்திட்டத்தில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இருப்பதுடன் வருமான வரிச் சலுகையும் கிடைப்பது கூடுதல் பலம். இத்திட்டத்தில் மூன்று ஆண்டுகளுக்கு பிரீமியம் செலுத்திய பின் அதை வைத்து கடன் பெற்றுக்கொள்ளலாம். இந்தத் திட்டம் ரிஸ்க் இல்லாத பாதுகாப்பான திட்டம் என்பது இன்னொரு ஸ்பெஷாலிட்டி.

குறைந்த முதலீடு (Low Investment)

இத்திட்டத்தில் மாதம் 233 ரூபாய் முதலீடு செய்து 17 லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம். மாதம் 233 ரூபாய் என்றால் தினமும் 8 ரூபாய் சேமித்தாலே போதும். இதில் முதலீடு செய்வதற்கான குறைந்தபட்ச வயது 8. அதிகபட்ச வயது 59. குறைந்தபட்ச முதலீட்டு வரம்பு 2 லட்சம் ரூபாய். அதிகபட்ச முதலீட்டு வரம்பு எதுவும் இல்லை. பாலிசி காலம் 16 முதல் 25 ஆண்டுகள் வரை உங்கள் விருப்பப்படி தேர்வு செய்துகொள்ளலாம். பிரீமியம் செலுத்தத் தொடங்கி மூன்று ஆண்டுகளில் கடனும் பெற்றுக்கொள்ளலாம்.

வருமான வரி விலக்கு

பாலிசிதாரர் இறந்துவிட்டால் நாமினிகளுக்கு உறுதித் தொகையுடன் போனஸ் தொகையும் சேர்த்து வழங்கப்படும். இதுமட்டுமல்லாமல், இத்திட்டத்திற்கு செலுத்தப்படும் பிரீமியத் தொகைக்கு வருமான வரி விலக்கு கிடைக்கிறது.

மேலும் படிக்க

உங்களுடைய ஆதார் கார்டு தொலைந்துவிட்டதா? கவலைய விடுங்க இதைப் பண்ணுங்க!

ஆம்புலன்ஸ் டிரைவருக்கு அதிர்ஷ்டம்: லாட்டரியில் ஒரு கோடி பரிசு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)