இப்படி கூட நடக்குமா என வியக்க வைக்கும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. குறிப்பாக சவால் மிகுந்ததாக நாம் கருதும் காட்சிகள், வைரலாகி நம்மை அதிகம் சிந்திக்க வைக்கின்றன. அந்த வகையில் தற்போதைய வரவு, பாம்புடன் ஒரு சிறுமி அசால்டாய் தூங்குவது.
பாம்பு வீடியோக்கள்
இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம், இங்கு நாம் பல விதமான வீடியோக்களை தினமும் காண்கிறோம்.சமீப காலங்களில் பாம்புகள் தொடர்பான வீடியோக்கள் மிகவும் பிரபலமாக உள்ளன.பொதுவாக பாம்புகளை கண்டாலே அனைவரும் அஞ்சி ஓடத்தான் செய்வார்கள். ஆனால், இவற்றை சர்வ சாதாரணமாக கையாள்வதைக் கண்டு நமக்கே வியப்பு ஏற்படுகிறது.
பதறவைக்கும் காட்சிகள்
அப்படி ஒரு துணிச்சல் கொண்ட சிறுமியின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அவர் ஒரு பாம்பை தனது மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டு படுக்கையில் தூங்குவதைக் காண முடிகின்றது. ஆனால், இப்படி ஒரு அசாத்திய செயலை செய்யும் போது அவர் அச்சப்படவில்லை. மாறாக, மிகவும் மகிழ்ச்சியாகவே காணப்படுகிறார். இடையில் அவர் பாம்புக்கு முத்தமிடுவதையும் காண முடிகிறது.
இந்த வீடியோவில், ஒரு சிறுமி தனது கையில் ஆபத்தான பாம்புடன் தூங்குவதை காண முடிகின்றது. ஆனால், பாம்பு விழித்திருப்பது அதன் சில அசைவுகள் மூலம் தெரிகிறது. இதை முதலில் பார்க்கும் அனைவரும் அதிர்ச்சியடைவார்கள். இந்தக் காட்சி உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கிறது.
மேலும் படிக்க...
18 மாதங்களாக மரணம் அடைந்த கணவன் உடலுடன் வாழ்ந்த மனைவி!
ரூ.25 கோடி பரிசால், நிம்மதியேப் போச்சு- ஆட்டோ டிரைவர் கதறல்!