உலக அளவில் மோட்டார் சைக்கிள் நிறுவனங்களில் மதிப்புமிக்க முன்னணி நிறுவனமாக திகழும் பஜாஜ் ஆட்டோ தற்போது தனது புதிய ‘சேடக் எலக்ட்ரிக்’ ஸ்கூட்டருக்கான முன்பதிவை தமிழகத்தின் முக்கிய நகரங்களில் துவக்கி உள்ளது. கோவை, மதுரை நகரங்களில் உள்ள கேடிஎம் ஷோரூமில் சேடக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது; சோதனை முறையில் ஓட்டிப் பார்க்கும் வசதியும் உள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த புதிய ஸ்கூட்டரை இந்நிறுவனத்தின் www.chetak.com என்ற இணையதளத்தில் 2 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.
சேடக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (Chetak Electric scooter)
நாளைய பசுமையான மற்றும் தூய்மையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டர்களுக்கான பராமரிப்பு சேவை என்பது 12 ஆயிரம் கிலோ மீட்டர் அல்லது ஒரு ஆண்டுக்கு பிறகு என்றும், இதற்கான பேட்டரி உத்தரவாதமானது 3 ஆண்டுகள் அல்லது 50 ஆயிரம் கிலோ மீட்டர் நிர்ணயித்துள்ளது.
இந்த ஸ்கூட்டர்கள் இண்டிகோ மெட்டாலிக், வெலுட்டோ ரோஸ்ஸோ, புரூக்ளின் பிளாக் மற்றும் ஹேசல்நட் ஆகிய 4 கண்களை கவரும் வண்ணங்களில் வெளிவருகின்றன. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை 1,48,279 ரூபாய் ஆகும். 5 மணி நேரத்தில் 100 சதவீதம் சார்ஜ் ஆகும் திறன் கொண்டது மற்றும் வேக சார்ஜ் முறையில் 60 நிமிடத்தில் 25 சதவீதம் சார்ஜ் செய்ய முடியும். ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 90 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கலாம்.
சிறந்த வரவேற்பு
இந்த ஸ்கூட்டர் ஸ்டீலில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஐபி67 தொழில்நுட்பமானது தண்ணீரால் எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் பாதுகாக்கிறது. புதிய அறிமுகம் குறித்து பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் செயல் இயக்குனர் ராகேஷ் ஷர்மா கூறுகையில், "சேடக் ஏற்கனவே இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஒவ்வொரு நகரத்திலும் இதற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இது கோவை, மதுரையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சேடக் 'நாளை நமது' – என்னும் உற்சாகமான தாரக மந்திரத்துடன் சிறப்பான எதிர்காலத்தை உங்களுக்கு வழங்கும். ஏற்கனவே முன் பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கான வினியோகம் இந்த மாதத்தில் துவங்க உள்ளது" என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க
எலக்ட்ரிக் வாகனம் வாங்குவோர் கவனத்திற்கு: மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு!