இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 4 May, 2022 11:17 AM IST

சிறுசிறுச் சேமிப்பது நமக்குச் சிறப்பான வாழ்க்கையைத் தரும் என்பார்கள். அதேபோல, சிறு தொழில் ஒன்றைக் கற்றுக்கொண்டால், எப்போதும் கவலை இல்லாமல் வாழலாம்.அவ்வாறு குறைந்த முதலீட்டில், அதிக லாபம் சம்பாதிக்க விரும்புவோர், அந்தந்தப் பருவத்திற்கு ஏற்றத் தொழில்களைத் தேர்ந்தெடுத்துக் களமிறங்குவது, கல்லாவை நிரப்பும்.

ஒவ்வொரு ஆண்டும் கோடைக்காலம், மழைக்காலம் என ஆறு முதல் எட்டு மாதங்களுக்கு கொசு வலைகளுக்கு அதிக டிமாண்ட் இருக்கும். இதுபோக சாதாரண நாட்களிலும் கொசு வலைகள் விற்பனையாகிக்கொண்டு இருக்கின்றன. ஆக இந்தக்கொசு வலைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்வதன்மூலம் நல்ல லாபம் ஈட்ட முடியும்.

இதற்கான மூலப் பொருட்களும் மிகக் குறைவு. பருத்தி வலை, நரம்பு வலை என இரண்டு வகையான கொசு வலைகள் உள்ளன. பருத்தி, நரம்பு ஆகியவற்றை மொத்தவிற்பனை மார்க்கெட்டில் வாங்கினால் சுமார் 10 ஆயிரம் ரூபாய் முதல் 12 ஆயிரம் ரூபாய்க்குள் ஒரு பெரிய ரோலாக வாங்கிவிடலாம்.

இதை வைத்து கொசு வலைகளாக தயார் செய்ய வேண்டும். சாதாரண கொசு வலைகள் மட்டுமல்லாமல் குழந்தைகள், சிறுவர்களுக்கு என விதவிதமான டிசைன்களில், கியூட்டான கொசு வலைகளையும் தயாரித்து விற்பனை செய்யலாம். சிறு மெத்தைக்கான கொசு வலை தயாரிக்க 100 ரூபாய் செலவாகும். ஆனால் ஒரு வலையை 300 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம்.

பெரிய மெத்தைக்கான கொசு வலை தயாரிக்க 200 ரூபாய் செலவாகும். ஆனால் ஒரு வலையை 600 ரூபாய் முதல் 750 ரூபாய் வரை விற்பனை செய்யலாம். ஆக, கொசுவலை விற்பனையில் கிட்டத்தட்ட மூன்று மடங்கு லாபம் சம்பாதிக்க முடியும்.

மேலும் படிக்க...

பெண்களைக் குறிவைத்துத் தாக்கும் கால்சியம் குறைபாடு!

பிச்சை எடுத்து அன்னதானத்திற்கு ரூ1 லட்சம் நிதி- பிரமிப்பூட்டிய பாட்டி!

English Summary: Low investment - 3 times the profit!
Published on: 04 May 2022, 11:17 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now