வேளாண் துறை சார்ந்த வல்லுநர்கள் தலைமையில் எம்எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனை மற்றும் அறிவுரைகளை தொலைபேசி வாயிலாக வழங்கி வருகிறது. வேளாண் பணிகள் தொடர்ந்து நடைபெற அவர்களுக்கு உதவும் வகையில் தினமும் காலை 7 மணி முதல் 8 மணி வரை 99422 11044, 72999 25538, 72999 35543 இந்த எண்களில் தொடர்பு கொண்டு தேவையான தகவல்களை பெறலாம்.
இது குறித்து அந்நிறுவனத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், விவசாயிகள் தங்களின் சந்தேகங்களை அறிந்து கொள்ளும் வகையில் துறை சார்ந்த வல்லுநர்கள் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதில் மண்ணியல், பூச்சியியல், நோயியல், உழவியல், விதைத் தொழில்நுட்பம் உள்ளிட்ட வல்லுநர்கள் இடம் பெற்றுள்ளனர். எனவே விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.