Blogs

Monday, 14 October 2019 04:01 PM

மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு இலவசமாக இயற்கை மருந்தினை கொடுக்க முன்வந்துள்ளது உரம் வேளாண்மை துறை. அப்பகுதி விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளும்படி வேளாண்மை உதவி இயக்குனர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி,சேடபட்டி ஆகிய ஒன்றியங்களில் கடந்த ஆகஸ்டு மாதம் 20-ந் தேதி தொடங்கி செப்டம்பர் முதல் வாரம் வரை மழை பெய்து வந்தது. அப்பகுதி விவசாயிகள் மானாவாரியாக மக்காச்சோளத்தனை சாகுபடி செய்து இருந்தனர். சுமார்  25ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்த மக்காச்சோள பயிரானது தொடர்ந்து பெய்த மழையால் நன்றாக வளர்ந்து இருந்தது. ஆனால் வழக்கம் போல் செடிகளின் குருத்துகளில் படைப்புழுக்கள் தாக்குதல் ஏற்பட்டு பயிர்கள் சேதமடைந்து விட்டன. இதனால் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்தள்ளனர்.

டி.கல்லுப்பட்டி, சேடபட்டி வேளாண்மை உதவி இயக்குனர்கள் கூறுகையில்,  மக்காச் சோளம் பயிரில் உள்ள  படைப்புழுக்களை இயற்கை முறையில் அழிக்க வேண்டும். எனவே இதற்காக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள வேம்பு சார்ந்த மருந்துகள், மெட்டாரைசியம் மற்றும் ரசாயன மருந்துகள் ஆகியன  உரம் வேளாண்மை துறை மூலம் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

மருந்து தெளிப்பிற்காக ஆயிரம் ரூபாய் வழங்க தமிழக அரசு ஆணை வெளியிட்டு உள்ளது. இதனை கிராம கமிட்டி மூலம் வழங்குவதற்கான  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்,  இந்த கமிட்டியில் வேளாண்மை உதவி அலுவலர், அட்மா பணியாளர், விவசாய ஆர்வலர் குழு உறுப்பினர், முன்னோடி விவசாயி ஆகியோர் இடம் பெற்று இருப்பார்கள் என குறிப்பிட பட்டுள்ளது.

கிராம கமிட்டி குழு மூலம் விவசாயிகளுக்கு மருந்து தொகுப்புகள் வழங்கப்படுவதுடன்,மருந்து தெளிப்பிற்கான  செலவு விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த திட்டம்  மக்காச்சோளம் பயிரிட்ட சிறிய மற்றும் பெரிய விவசாயிகள் அனைவருக்கும்  பொருந்தும் என கூறப்பட்டுள்ளது

நன்றி: அக்ரி டாக்டர்

Anitha Jegadeesan
Krishi Jagran

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)