Blogs

Tuesday, 01 November 2022 05:10 PM , by: Deiva Bindhiya

Media manipulation in agriculture: Says ICAR Program Director SK Malhotra

தற்போது, ​​எல்லா இடங்களிலும் விவசாயிகள் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர், அவற்றை புரிந்து சமுதாயத்திற்கு காட்டும் வேளாண் விழிப்புணர்வின் பணி பாராட்டுக்குரியது என ICAR திட்ட இயக்குநர் டாக்டர். எஸ்.கே. மல்ஹோத்ரா கூறினார்.

ICAR திட்ட இயக்குநர் டாக்டர். எஸ்.கே. மல்ஹோத்ரா பல தகவல்களை கிரிஷி ஜாக்ரன் அணியுடன் பகிர்ந்து கொண்டார்.

விவசாயம் மற்றும் தோட்டக்கலைத் துறைகள் சமூகத்தின் மிக முக்கியமான பகுதிகள் என்றும் அவர்களின் நலனுக்காக நாம் அனைவரும் பாடுபட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

விவசாயம் தொடர்பான தகவல்களை இயன்றவரை ஒருங்கிணைத்து சாமானிய மக்களுக்குத் தகவல்களை வழங்க வேண்டும். இதுபோன்ற பணிகளை செய்து வரும் கிருஷி ஜாக்ரன் ஊடகத்தின் பணி உண்மையிலேயே பாராட்டுக்குரியது என்றார்.

கிரிஷி ஜாகரன், மற்ற ஊடகங்களைப் போலல்லாது, விவசாயிகள் மற்றும் விவசாயத் துறையின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவது உண்மையிலேயே பாராட்டத்தக்க செயல்.

மேலும் படிக்க: மோர்பி கேபிள் பாலம் விபத்து 144பேர் பலி, பிரதமரின் பயணம் ரத்து: ஏன்? என்ன காரணம்?

அதே பணியை செய்து விவசாய சகோதரர்களின் நலனுக்கான பணிகளை செய்து வருவதை பாராட்டினார்.

தற்போது விவசாயிகள் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர், இதையெல்லாம் தெரிந்து கொள்ள ஊடகங்கள் விவசாயிகளுடன் நெருக்கமாக உரையாட வேண்டும்.

அவர்களின் பிரச்சனைகளைப் பற்றி அவர்களிடம் பேசி, தகவல்களைப் பெற்று பின் அதனை அரசின் கவனித்திற்கு எடுத்துச்செல்ல வேண்டும்.

நிபுணர்களை தொடர்பு கொண்டு விவசாயிகளுக்கு உரிய தீர்வு வழங்க வேண்டும் என்றார்.

70% மானியம்: கால்நடை காப்பீட்டுத் திட்டம் குறித்து அறிவிப்பு!

ஜனவரி இதழ் நிர்வாகம்!

கிரிஷி ஜாக்ரன் வரும் ஜனவரியில் முழுக்க முழுக்க தினை பற்றிய ஒரு இதழை வெளியிட திட்டமிட்டுள்ளது, அதை முழுமையாக டாக்டர். எஸ்.கே.மல்ஹோத்ரா கையாளுவார். ஏற்கனவே, மத்திய அரசு 2023 ஆம் ஆண்டை தினை ஆண்டாக அறிவித்துள்ளது குறிப்பிடதக்கது.

விவசாய மாதிரியின் கையேட்டை வெளியிடுவதற்கான பரிந்துரை, விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு வகையான கையேடுகள், புத்தகங்கள் மற்றும் இதழ்கள் வெளிவர வேண்டும் என அவர் வலுயுறுத்தினார்.

கால்நடை வளர்ப்பு, கால்நடை மேலாண்மை, தோட்டக்கலை, இலகு விவசாயம், இயற்கை விவசாயம், கைத்தோட்டம், உரம் தயாரித்தல் போன்ற பயனுள்ள தகவல்களுடன் கூடிய கையேட்டை வெளியிட ஊடகங்கள், விஞ்ஞானிகள், வேளாண் அலுவலர்கள் மற்றும் மக்கள் முயற்சிக்க வேண்டும்.

மேலும் படிக்க:

100% மானியத்தில் விவசாயிகளுக்கு பாசன கருவிகள் வழங்கல்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)