Millionaire Farmer of India Awards 2023, sponsored by Mahindra Tractors-நிகழ்வோட ஒரு பிரம்மாண்டமான அதிரடி அப்டேட் தற்போது வெளியாகியிருக்கு. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வருகிற டிச.6 ஆம் தேதி டெல்லியில் உள்ள பூசா மைதானத்தில் MFOI sponsored by Mahindra Tractors நிகழ்வை தொடங்கி வைக்க உள்ளார்.
அன்றைய தினமே இந்தியா முழுவதும் பயணம் செய்து விவசாயிகளின் புகழை பரப்ப காத்திருக்கும் MFOI kisan bharat yatra-வையும் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். மில்லினியர் விவசாயிகளின் செயல்பாடுகளையும், அவர்கள் கடைப்பிடிக்கும் வேளாண் தொழில் நுட்ப முறைகளையும் அனைத்து விவசாயிகளும் அறிந்திடுவதே நோக்கமாக கொண்டுள்ளது, MFOI kisan bharat yatra.
26,000 கி.மீ தூரம், 4520-க்கும் மேற்பட்ட சந்திப்பு இடங்கள் என இந்த யாத்திரை இந்தியா முழுவதும் பயணித்து பல லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகளிடம் மில்லினியர் விவசாயிகளின் வெற்றிப் பாதையை காண்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
"விவசாய வளர்ச்சி விகிதம் 12 சதவீதத்தில் இருந்து 24 சதவீதமாக அதிகரித்தால், தனிநபர்கள் கிராமங்களை விட்டு நகரங்களுக்கு செல்ல மாட்டார்கள்" என்று கிரிஷி ஜாக்ரன் நிறுவனர் மற்றும் தலைமை ஆசிரியர் எம்.சி. டொமினிக் உடனான உரையாடலின் போது அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
க்ரிஷி ஜாக்ரான் மற்றும் Agriculture world இணைந்து மில்லியனர் ஃபார்மர் ஆஃப் இந்தியா (MFOI) விருது வழங்கும் நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளதாக ஏற்கெனவே தெரிவிக்கப்பட்ட நிலையில் விவசாயிகளின் நம்பகமான மற்றும் இந்தியாவின் நம்பர் 1 டிராக்டர் நிறுவனமான ”மஹிந்திரா டிராக்டர்ஸ்” MFOI 2023 நிகழ்வுக்கான முதன்மை மற்றும் டைட்டில் ஸ்பான்ஸராக இணைந்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் டெல்லியிலுள்ள சாணக்யபுரியில் உள்ள தி அசோக் ஹோட்டலில் MFOI விருது வழங்கும் நிகழ்விற்கான கோப்பை மற்றும் இலட்சினை வெளியிடும் நிகழ்வு ஒன்றிய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தலைமையில் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது.
அதனைத் தொடர்ந்து 16 பிரிவுகளில் விவசாயிகள்/மீனவர்கள்/ கால்நடை பராமரிப்பாளர்கள் என பலரும் இந்தியா முழுவதுமிருந்து விருதுக்கு விண்ணப்பித்து உள்ளனர். வருகிற டிசம்பர் மாதம் 6, 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் டெல்லியில் உள்ள பூசா மைதானத்தில் MFOI விருது வழங்கும் விழாவுடன், வேளாண் கண்காட்சியும் நடைப்பெற உள்ளது.
வேளாண் தொழில் சார்ந்த நிறுவனங்களின் ஸ்டால்கள், வேளாண் அறிஞர்களின் தலைமையில் கருத்தரங்குகள், சாதனை விவசாயிகளுடனான கலந்துரையாடல் என பல்வேறு நிகழ்வுகள் நடைப்பெற உள்ள நிலையில் பார்வையாளர்களாக பங்கேற்க விரும்புபவர்கள் இணையம் மூலமாக முன்பதிவு செய்யலாம். அதற்கான லிங்க் பின்வருமாறு-
இதையும் காண்க:
MFOI Awards 2023 நிகழ்வின் முதன்மை ஸ்பான்ஸராக இணைந்தது மஹிந்திரா டிராக்டர்ஸ்