Blogs

Thursday, 07 July 2022 09:19 PM , by: Elavarse Sivakumar

மனதிற்கு பிடித்தவர் கொடுத்த பொருள் என்றால், அது நமக்கு எப்போதுமே முக்கியம்தான். ஏன் பொக்கிஷம் என்றுகூட சொல்லலாம். ஆனால் துரதிஷ்டவசமாக, அதனைத் தொலைக்க நேர்ந்தால், மனம் மிகவும் வேதனைக்கு உள்ளாகும். அப்படித்தான், காலமானத் தந்தையின் நினைவாக வைத்திருந்த 1.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பேனா மாயமானதால், கன்னியாகுமரி எம்பி மிகுந்த வேதனையில் உள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் எதிர்க்கட்சிகளின் குடியரசு தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தி.மு.க கூட்டணி கட்சிகள் பங்கேற்றன.

சந்தேகம்

இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினர்களின் ஆதரவு கோரும் பொருட்டு காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் கலந்துகொண்டார். அப்போது, விஜய் வசந்தின் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான பேனா மாயமாகியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த விஜய் வசந்த் பேனாவை யாரேனும் திருடி இருக்கலாம் என்று சந்தேகித்து கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தந்தையின் நினைவாக

காணாமல் போயிருக்கும் பேனா விஜய் வசந்தின் தந்தையும், கன்னியாகுமரியின் முன்னாள் எம்.பி.,யுமான மறைந்த வசந்தகுமார் பயன்படுத்திய பேனாவாகும். தந்தை இறந்த பிறகு அதே தொகுதியில் எம்.பியாக வெற்றி பெற்ற விஜய் வசந்த் தந்தையின் நினைவாக அந்த பேனாவை பயன்படுத்தியுள்ளார்.

ரூ.1.50 லட்சம் விலை

இந்த நிலையில், ரூ.1.50 லட்சம் மதிப்பிலான அந்த பேனா காணாமல் போனது விஜய் வசந்திற்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க...

கஞ்சா சிக்கன் - இப்போ இதுதான் டிரெண்ட்!

மாதம் ரூ.2500 -போஸ்ட் ஆபீஸில் பணம் போட்டவர்களுக்கு ஜாக்பாட்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)