Blogs

Saturday, 20 August 2022 10:49 AM , by: Elavarse Sivakumar

ஆந்திராவில் உள்ள காவல் நிலையத்திற்கு கையில் மனிதத் தலையுடன் ஒரு பெண் வந்து சரணடைந்தது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மாமியாரே மருமகளைக் கொன்றது அம்பலமானது.

ஆபத்து

மாமியார்- மருமகள் இடையே சமூக உறவு இருப்பது அத்தி பூர்த்தாற் போல எங்காவதுதான் இருக்கும் என்பதற்கு இந்த உதாரணம். என்னதான் ஆத்திரமும், கோபமும் கண்ணை மறைத்தாலும், ஒரு உயிரைக் கொல்லும் அளவுக்கு போவது மனிதகுலத்திற்கு நல்லதல்ல.

திடுக்கிடும் தகவல்கள்

ஆந்திர மாநிலம் கொத்தா பேட்டை போலீஸ் நிலையத்திற்கு பெண் ஒருவர் மனித தலையுடன் வந்ததை கண்டு அதிர்ச்சி போலீசார் அவரை கைது செய்து விசாரித்தனர். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள கொத்தாபேட்டை ராமாபுரம் என்ற பகுதியை சேர்ந்தவர் சுப்பம்மா. இவருடைய மருமகள் வசுந்தரா. இவர்களுக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறுகள் நடந்து வந்துள்ளது.

சொத்துத் தகராறு

வசுந்தராவுக்கு வேறொரு ஆணுடன் தொடர்பு இருப்பதாக சுப்பம்மா சந்தேகப்பட்டார், மேலும் வசுந்தரா தனது குடும்பத்தின் சொத்தை அவரது பெயருக்கு மாற்றிவிடுவார் என்றும் பயந்து உள்ளார். சுப்பம்மாவும் மற்ற உறவினர்களும் சேர்ந்து மதிய உணவு சாப்பிட வருமாறு கூறி வசுந்தராவை தங்கள் வீட்டிற்கு அழைத்து உள்ளனர். அங்கு வசுந்தரா கொல்லப்பட்டு தலை துண்டிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

கொலைகார மாமியார்

பின்னர் சரணடைவதற்காக சுமார் 6 கிமீ தூரம் போலீஸ் நிலையத்திற்கு சுப்பம்மா நடந்து வந்துள்ளார். மாமியரே மருமகளை அரிவாளால் வெட்டிய திடுக் தகவல் வெளிச்சத்திற்கு வர, சுப்பம்மாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தனர்.

மேலும் படிக்க...

விடாது துரத்தும் காகங்கள்- தலையில் கொத்துவதால் அலறும் பெண்மணி!

கத்திரிக்காயை பச்சையாக கடித்துக் காண்பித்த பெண் எம்.பி!

 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)