தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சியின் (என்டிடிபி) வேட்பாளர் ஹெகானி ஜகாலு வியாழக்கிழமை திமாபூர்-3 சட்டமன்றத் தொகுதியில் வெற்றிபெற்று நாகாலாந்து மாநில சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி ஆனார்.
1963-ல் நாகாலாந்து மாநிலமாக உருவான பிறகு முதல்முறையாக ஒரு பெண் பிரதிநிதியைப் பெற்றுள்ளது.
நாரி சக்தி விருது பெற்ற ஜகாலு ஹெகானி திமாபூர்-III சட்டமன்றத் தொகுதியில் 1,536 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அவர் 14,241 வாக்குகள் பெற்று லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) வேட்பாளர் அசெட்டோ ஜிமோமியை தோற்கடித்தார், அவர் 12,705 வாக்குகள் பெற்றார்.
அதேசமயம், இந்திய தேசிய காங்கிரஸ் (INC) வேட்பாளர் Vetetso Lasuh வெறும் 357 வாக்குகளைப் பெற்றார்.
"இது முதல் படி மட்டுமே. எதிர்காலத்தில் நாம் பல நல்ல விஷயங்களைச் செய்ய வேண்டும்," என்று ஹெகானி ஜகாலு தனது வெற்றியைப் பற்றி கூறினார்.
2018 ஆம் ஆண்டு நாரி சக்தி விருதினைப் பெற்ற ஜகாலு, தொகுதி மக்களுக்கு நான்கு அம்ச அர்ப்பணிப்பைச் செய்திருந்தார்.
தேர்தலின் போது, சமூக தொழில்முனைவோர், இளைஞர்களுக்கு வாழ்வாதாரம் வழங்கவும், பெண்களின் உரிமைகளுக்காக போராடவும், தனது தொகுதியை முன்மாதிரியாக மாற்றவும், தனது தொகுதியின் சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிகளின் வளர்ச்சிக்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுப்பதாகவும் உறுதியளித்தார்.
ஹெகானி ஜக்கலு யார்?
ஹெகானி ஜகாலு திமாபூரில் பிறந்தார். அவர் வழக்கறிஞர் மற்றும் சமூக தொழில்முனைவோர் ஆவார்.
யூத் நெட்டின் நிறுவனர்
அவர் நாகாலாந்தில் உள்ள நகர்ப்புற மற்றும் கிராமப்புறப் பகுதிகளைச் சேர்ந்த வேலையற்ற இளைஞர்கள், கல்லூரி மற்றும் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் திறன் மேம்பாடு மற்றும் வாழ்வாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் யூத் நெட்டின் நிறுவனர் மற்றும் தலைவராகவும் உள்ளார்.
ஹெகானி ஜகாலுவின் கல்வி
பெங்களூரில் உள்ள பிஷப் காட்டன் பெண்கள் பள்ளியில் படித்தார். ஹெகானி லேடி ஸ்ரீ ராம் கல்லூரி மற்றும் டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்ட பீடத்தின் முன்னாள் மாணவர் ஆவார்.
ஹெகானி ஜகாலுவின் ஆரம்பகால வாழ்க்கை
அவர் இந்திய உச்ச நீதிமன்றம் மற்றும் டெல்லி உயர் நீதிமன்றம் ஆகிய இரண்டிலும் பணியாற்றியுள்ளார். அவர் சான் பிரான்சிஸ்கோ பல்கலைக்கழகத்தில் எல்எல்எம் பட்டம் பெற்றவர். அவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகம், வாஷிங்டன் டி.சி.யில் உள்ள அமெரிக்கன் பல்கலைக்கழகம், அம்னெஸ்டி இன்டர்நேஷனல்- சான் பிரான்சிஸ்கோ மற்றும் நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகம் ஆகியவற்றில் விரிவான பயிற்சி பெற்றுள்ளார்.
இந்தியா திரும்புதல்
அவர் 2005 இல் நாகாலாந்திற்குத் திரும்பி, இளம் தொழில் வல்லுநர்களின் நண்பர்கள் குழுவுடன் யூத்நெட்டைத் தொடங்கினார்.
ஹெகானி ஜகாலு பெற்ற விருதுகள்
அவர் நாரி சக்தி புரஸ்கார் விருது’ 2018 மற்றும் 2021 இல் மதிப்புமிக்க ஷ்னீடர் எலக்ட்ரிக் பிரேர்னா விருதையும் பெற்றவர் ஆவார்.
மேலும் படிக்க
உளுந்து, பச்சைப்பயறு குறைந்தபட்ச ஆதரவு விலையில் அரசு நேரடி கொள்முதல்!
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்?அரசு கூறுவது என்ன?