Blogs

Friday, 08 November 2019 02:31 PM

கால்நடைகளுக்கு கொடுக்கப்படும் தீவனப் புல் சேதமாகாமல், எளிதில் உட்கொள்ளும் பொருட்டு தேசிய கால்நடை இயக்கத்தின் கீழ் தமிழகம் முழுவதும் மானியம் விலையில் புல்வெட்டும் கருவி வழங்கப் பட்டு வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த கால்நடை வளர்ப்போர் விண்ணப்பிக்கலாம் என  மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மத்திய, மாநில அரசின் சார்பில் 75 % மானியத்தில் இயந்திர புல் வெட்டும் கருவி வழங்கப் பட்டு வருகிறது. இவ்வாண்டில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்குடன் ரூ.6 கோடியில் 3,000 இயந்திர புல்வெட்டும் கருவியை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த  75 பயனாளிகளுக்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க தகுதியானவர்கள்

  • ஆதிதிராவிடர், பழங்குடி இனத்தைச் சேர்ந்தவராக இருத்தால் முன்னுரிமை அளிக்கப்படும்.
  • குறைந்தபட்சம் கால் ஏக்கர் நிலப்பரப்பில் தீவனம் உற்பத்தி செய்ய ஏதுவாக மின்சார வசதியுடன் கூடிய நிலம் வைத்திருக்க வேண்டும்.
  • பயனாளிகள் குறைந்தது  இரண்டு மாடுகள் வைத்திருக்க வேண்டும்.
  • சுய உதவிக்குழு உறுப்பினர்கள் முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். எனவே அவர்கள் குறைந்தது ஒரு மாடு வைத்திருக்க வேண்டும்.
  • பயனாளிகள் ஆவின் கூட்டுறவு பால் நிறுவனத்தில் உறுப்பினராக இருத்தால் அவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப் படும்.
  • மாவட்ட ஆட்சியரால் தோ்வு செய்யப்படும் பயனாளிகள் மீதமுள்ள  25 % (சரக்கு மற்றும் சேவை வரியுடன்) பங்குத் தொகையினை உடனடியாக செலுத்துக் கூடியவராக இருக்க வேண்டும். 

விண்ணப்பதாரா்கள் அருகில் உள்ள கால்நடை மருந்தக உதவி மருத்துவரிடம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியரே பயனாளிகளை தேர்வு செய்வர். மாவட்ட ஆட்சியரால் தோ்வு செய்யப்படும் பயனாளிகள் பட்டியலே இறுதியானது.

Anitha Jegadeesan
Krishi Jagran

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)