Blogs

Monday, 10 February 2020 03:45 PM , by: Anitha Jegadeesan

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் (ICAR) வழிகாட்டுதலின்படி தேசிய வாழை ஆராய்ச்சி மையம்  தமிழ்நாட்டில் திருச்சியில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையம் வாழை பற்றிய அனைத்துத் தகவல்களின் களஞ்சியமாகவும், தேசிய வாழை பண்பகப் பண்ணையாகவும் செயல்படுகிறது. இங்கு வாழையில் சாகுபடியில் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குதல், இரகங்கள் மற்றும் தாக்கும் நோய்கள் என எல்லா விதமான பிரச்சினைகளை களையவும், வாழை தொடர்பான ஆராய்ச்சியினை ஒருங்கிணைத்து வழி நடத்தவும் இந்நிலையம் செயல் படுகிறது.

தேசிய வாழை ஆராய்ச்சி மையம் நடத்தும் “வாழை மெகாத் திருவிழா” எதிர் வரும் பிப்ரவரி 23 மற்றும் 24-ம் தேதிகளில் திருச்சி கலையரங்கம் வளாகத்தில் நடைபெறவிருக்கிறது.  இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வாழை விவசாயிகள் மற்றும் விற்பனையாளர்கள், தொழில் முனைவோர்கள்,  மாணவர்கள் மற்றும் வாழை விஞ்ஞானிகள் என 10000 அதிமான நபர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும் இக்கண்காட்சியில் 300 அதிகமான வாழைத்தார்கள் காட்சி படுத்த உள்ளனர்.  அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் வர்த்தக / ஏற்றுமதி / மதிப்புகூட்டுதல்,  வேளாண் இடுபொருள் மற்றும் வாழை தொடர்பான கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் மட்டுமல்லாது பொது மக்களும் கலந்துக் கொண்டு  பயனடையலாம் என  திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)