Blogs

Wednesday, 27 October 2021 07:40 AM , by: Elavarse Sivakumar

தீபாவளிக்கு இன்னும் சில தினங்களே உள்ளதால் ஷாப்பிங்கில் மக்கள் பிஸியாகிவிட்டனர். இதேபோல ரயில் பயணம் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகளுக்கும் தேவை அதிகரித்துள்ளது.

ரயில், ஷாப்பிங் சலுகைகள் (Train, shopping offers)

இது ஒருபுறம் என்றால், ஷாப்பிங் சலுகைகள், ரயில் டிக்கெட் சலுகைகள் இரண்டும் ஒரே இடத்தில் கிடைத்தால் எப்படி இருக்கும் என சிந்திப்பவரா நீங்கள்?

IRCTC SBI Credit card

உங்களைப் போன்றவர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்துவதற்காக ஐஆர்சிடிசி (IRCTC) நிறுவனமும், எஸ்பிஐயும் இணைந்து ஐஆர்சிடிசி எஸ்பிஐ கிரெடிட் கார்டு (IRCTC SBI Credit card) அறிமுகப்படுத்தியுள்ளன. இந்த கார்டைப் பெற விரும்புவோர் எஸ்பிஐ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

சலுகைகள் (Discounts)

  • கார்டு வைத்திருக்கும் நபர் பரிசுப் புள்ளிகளை (Reward points) வைத்து இலவசமாகவே ரயில் டிக்கெட் புக்கிங் செய்யலாம்.

  • ஐஆர்சிடிசி மூலம் ரயில் டிக்கெட் புக்கிங் செய்யும்போது பரிசுப் புள்ளிகளில் 10% வரை வேல்யூ பேக் சலுகையும் பெற முடியும். ஒரு பரிசுப் புள்ளியின் மதிப்பு 1 ரூபாய்.

  • முதல் 450 நாட்களில் 500 ரூபாய்க்கு மேல் பரிவர்த்தனை செய்தால் 350 வரை போனஸ் பரிசுப் புள்ளிகள் கிடைக்கும்.

  • இதைத்தவிர இந்த கார்டு வைத்திருப்பவர் premium railway lounge வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம்.


 1% தள்ளுபடி (1% discount)

அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் பெட்ரோல், டீசல் போடும்போது இந்த கார்டை பயன்படுத்தினால் கூடுதல் கட்டணத்தில் (fuel surcharge) 1% தள்ளுபடி கிடைக்கும். இதுபோக பல்வேறு ஷாப்பிங் சலுகைகளும் கிடைக்கின்றன.

மேலும் படிக்க...

இந்த பைக் ஓட்டி விபத்தில் இறந்தால் காப்பீடு கிடையாது!

பட்டாசு வடிவில் சாக்லேட்டுகள்- தீபாவளியையொட்டி விற்பனை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)