Blogs

Sunday, 19 December 2021 02:41 PM , by: R. Balakrishnan

New Entrepreneurs

புதிய தொழில்முனைவோர் தொலை நோக்குப்பார்வையில் செயல்பட்டால், வெற்றி பெறலாம் என கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சிமைய திருப்பூர் கிளை சார்பில், தொழில் துவங்குவது குறித்த ஆன்லைன் கருத்தரங்கம், நேற்று நடந்தது. பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் முரளிதரன் துவக்கிவைத்தார்.

புதிய தொழில்முனைவோர் (New Entrepreneurs)

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக முன்னாள் துணை பொதுமேலாளர் விஸ்வநாதன் பேசியதாவது: அரசால், எல்லோருக்கும் வேலை வழங்க முடியாது. சுய தொழில்முனைவோரால் (Self Entrepreneurs), அதிகளவு வேலைவாய்ப்பு உருவாகின்றன. அதனாலேயே, புதிய தொழில் முனைவோருக்கு மத்திய, மாநில அரசுகள் ஏராளமான சலுகைகளை வழங்கி, ஊக்கப்படுத்துகின்றன.

தொலை நோக்குப்பார்வை (Vision)

எந்த ஒரு தொழில் துவங்கும் முன்னரும், ஏற்கனவே அந்த தொழிலில் ஈடுபட்டிருப்போரின் நிலை, அவர்கள் எத்தகைய யுத்திகளை கையாளுகின்றனர் என தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். புதிய தொழில் துவங்கும்போது, திட்டமிடுதல் மிகவும் அவசியம். அடுத்த பத்து ஆண்டுகளில் நமது தொழில் எத்தகைய நிலையை அடைய வேண்டும்; போட்டியாளர்களின் வளர்ச்சி எப்படியிருக்கும்; போட்டியை எப்படி எதிர்கொள்வது என்கிற தொலை நோக்குப்பார்வையுடன் கூடிய அம்சங்களுடன், வணிக மாதிரி தயாரிக்கவேண்டும்.

எந்த ஒரு தொழில்துறையிலும், தொழில்நுட்ப மேம்பாடு, உற்பத்தி பொருட்களில் புதுமைகளை புகுத்துதல் மிகவும் அவசியமாகிறது. இதன்மூலம், நிறுவனம் நீண்ட காலம் நிலைத்திருக்க முடியும். போட்டியாளர்களை வெற்றிகண்டு, தொடர்ந்து வளர்ச்சியை நோக்கி பயணிக்க முடியும். நிறுவனங்கள் நடைமுறை மூலதனத்தை சரியாக கணக்கிட வேண்டும். சிறு தவறுகள் ஏற்படுவது இயல்பு; ஆனால், அவற்றை உடனடியாக கண்டறிந்து சரி செய்ய வேண்டும்.

மேலும் படிக்க

குறைந்த வட்டியில் கடன்: மத்திய அரசின் சிறப்பு கடன் முகாம்!

விண்வெளிக்கு இந்தியர்கள் செல்ல வாய்ப்பு: மயில்சாமி அண்ணாதுரை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)