வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்ப உலகில், அனௌத்துமே உள்ளங்கையில் வந்துவிட்டது. தொழில்நுட்பத்தின் மூலம், நமக்கு பல நன்மைகள் கிடைத்துள்ளது. இதில் முக்கியமானது தான் கூகுள் மேப். சேர வேண்டிய இடத்திற்கு வழி தெரியாமல் நடுவீதியில் விற்பவர்களுக்கு, மிக எளிதாக வழியைக் காட்டுகிறது கூகுள் மேப். இதில் மேலும் ஒரு கூடுதல் அம்சமாக காற்றின் தரத்தையும் தெரிந்து கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
கூகுள் மேப் (Google Map)
பயணிக்கும் வழியில் உள்ள காற்றின் தரத்தையும், தன்மையையும் குறித்து கணக்கிட்டு சொல்லும் புதிய சேவையானது கூகுள் மேப்பில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
கூகுள் மேப் என்பது, கூகுள் நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு வழிகாட்டும் செயலியாகும். இந்த செயலியானது, நிலப்படங்களை மிகவும் துல்லியமாக காட்டி வழி தேடுபவர்களுக்கு, உற்ற தோழனாக விளங்குகிறது. உலகம் அனைத்தையும் ஒரு செயலியில் பார்க்க முடியும் எனில், அது கூகுள் மேப்பில் மட்டுமே சாத்தியம். இந்த காரணத்திற்காகவே உலகம் முழுவதும் கூகுள் மேப்பின் தேவையானது, அத்தியாவசியமான ஒன்றாக மாறி வருகிறது.
கூகுள் மேப் வசதி வந்த பிறகு, மக்கள் உள்ளூர் வாசிகளிடம் விலாசம் கேட்பது குறைந்து விட்டது. ஊர்ப் பெயர் தெரியாத பகுதிகளுக்கு கூட மிக எளிதாக சென்று வர முடியும் என்றால், அதற்கு கூகுள் மேப்பின் மேம்பட்ட சேவைகள் தான் காரணமாக உள்ளது.
காற்றின் தரம் (Quality of Air)
புதிய வசதியை கூகுள் மேப் நிறுவனம் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, காற்றின் தூய்மை மற்றும் பனிப்படலம் உருவாகியுள்ள பகுதிகள் குறித்து தெரிந்து கொள்ளும் வகையில், புதிய அப்டேட் வர இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வசதியானது, தற்போது பரிசோதனை முடிந்து அமெரிக்காவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்கு தளங்களில் இந்த புதிய வசதிக்கான பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இது வெற்றி பெற்று விட்டால், உலக நாடுகள் அனைத்திலும் இந்த புதிய வசதியை கொண்டு வர கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
மீண்டும் உயர்ந்தது ரெப்போ வட்டி விகிதம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!