நிலையான பென்சன் தொகை வழங்குவதற்காக புதிய பென்சன் திட்டத்தை (New Pension Scheme) உருவாக்குவதற்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO) திட்டமிட்டு வருகிறது. தொழிலாளர் பென்சன் திட்டம் - 1995 கீழ் குறைந்தபட்ச பென்சன் தொகையை உயர்த்துவதற்கான கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. ஆனால் இதுகுறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை. ஏனெனில், இவ்விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
நிலையான பென்சன் (Fixed Pension)
நிலையான பென்சன் தரும் ஃபிக்ஸட் பென்சன் திட்டத்தை (Fixed Pension Scheme) கொண்டுவர EPFO திட்டமிட்டு வருகிறது. இந்தத் திட்டத்தை பொறுத்தவரை, உங்களின் முதலீடு எவ்வளவோ அதற்கு ஏற்ப பென்சன் தொகை இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
பென்சன் தொகையை தேர்வு செய்வதற்கான வசதியும் இத்திட்டத்தில் இருக்கும். தனியார் துறை ஊழியர்கள், சுய வேலை செய்யும் ஊழியர்கள் உள்ளிட்டோர் இந்த நிலையான பென்சன் திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம்.
முழு வரி விலக்கு (Full tax relaxation)
தொழிலாளர் பென்சன் திட்டத்தில் உள்ள தொகைக்கு முழு வரி விலக்கு உண்டு. ஆனால், குறைந்தபட்ச பென்சன் தொகை மாதம் 1250 ரூபாயாக மட்டுமே உள்ளது. இத்தொகையை உயர்த்த வேண்டும் என கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. இந்நிலையில் ஃபிக்ஸட் பென்சன் திட்டத்தை உருவாக்குவது குறித்து தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் பரிசீலித்து வருகிறது.
மேலும் படிக்க