2022ம் ஆண்டு வரவுள்ள நிலையில் வங்கிகள் புதிய கடன் திட்டங்களை அறிவிக்கின்றது. மேலும் வட்டி விகிதங்களிலும் பல மாற்றங்கள் கொண்டு வரப்படுகிறது. அந்த அடிப்படையில் ஐசிஐசிஐ வங்கி பிக்ஸட் டெபாசிட் (Fixed Deposit) திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை குறைக்கிறது. இந்த குறைக்கப்பட்ட வட்டி முறை டிசம்பர் 24-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
அதுமட்டுமின்றி 2022ம் ஆண்டுக்கான புதிய வீட்டுக் கடன் மற்றும் வாகன கடன் ஆகியவை அறிமுகப்படுத்தப்படுகின்றன. இதனையடுத்து தற்போது ஏடிஎம் பண பரிவர்த்தனை முறைகளிலும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது.
பண பரிவர்த்தனை (Money Transaction)
வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் வங்கிகளுக்கு செல்வத்தை தவித்து அந்தந்த வங்கி ஏடிஎம் அல்லது பிற ஏடிஎம்களிலும் பண பரிவர்த்தனைகளை செய்வர். அதிலும் ஆன்லைனில் பரவல் துவங்கிய நாளில் இருந்து வங்கிகள் மூலமாக சேவை வழங்கி வரும் நிலையில் வாடிக்கையாளர்கள் ஏடிஎம் மற்றும் இணையதளம் வாயிலாக மட்டுமே பணம் பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர்.
இந்நிலையில் ஏடிஎம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் மாதம் ஒன்றுக்கு வாடிக்கையாளர்கள் ஏடிஎம் கார்டு மூலமாக 5 முறை மட்டுமே இலவசமாக (5 Times Free) பணம் எடுக்க முடியும். அதற்கு மேல் செய்யப்படும் பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும்.
கார்டு எண் (Card Number)
இதனைத்தொடர்ந்து மெட்ரோ நகரங்களில் மாதம் 3 முறை மட்டுமே இலவசமாக பரிவர்த்தனைகளை செய்யலாம். ஒருமுறை பண பரிவர்த்தனை ஏடிஎம் கட்டணமாக 21 ரூபாய் வசூலிக்கப்படும். புதிய விதிமுறை வருகின்ற 2022 ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு பயன்படுத்தி கட்டணம் செலுத்தும் போது ஒவ்வொரு முறையும் கார்டு எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பதிவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் படிக்க