Blogs

Tuesday, 19 October 2021 09:15 AM , by: R. Balakrishnan

Atal pension scheme

அடல் பென்ஷன் திட்டத்தின் (APS) கீழ் இந்த நிதியாண்டில் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை பதிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக பென்ஷன் ஆணையம் தெரிவித்துள்ளது.

அடல் பென்ஷன் திட்டம்

அமைப்புசாரா துறையில் உள்ள ஊழியர்களுக்கு பலன் அளிக்கும் ஓய்வூதிய திட்டமாக அடல் பென்ஷன் திட்டம் அமைகிறது. இந்த திட்டத்தின் வாயிலாக, ஓய்வு காலத்தில், 5,000 ரூபாய் வரை மாத பென்ஷன் (Pension) பெறலாம். இந்த நிதியாண்டில் அடல் பென்ஷன் திட்டத்தில் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை பதிவு செய்ய திட்டமிட்டு உள்ளதாக பென்ஷன் ஆணைய முழுநேர உறுப்பினர் தீபக் மொஹந்தி தெரிவித்துள்ளார்.

புதிய திட்டம்

இதுவரை இந்த நிதியாண்டில் 39.8 லட்சம் பேர் இணைந்து உள்ளனர். இது, கடந்த ஆண்டு 79 லட்சமாக இருந்தது.அடல் பென்ஷன் திட்டத்தில் உறுப்பினர்கள் சேர்வதில் உத்தர பிரதேசம், பீஹார், மேற்கு வங்கம் முன்னிலை வகிக்கின்றன. வங்கிகள், வங்கிசாரா அமைப்புகள், பேமென்ட் வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் வாயிலாக அடல் பென்ஷன் திட்டத்தை பயனாளிகளிடம் விரிவாக கொண்டு செல்ல ஆணையம் திட்டமிட்டுள்ளது. நாடு முழுதும் இதற்கான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேலும் படிக்க

சமையல் எண்ணெய் விலை குறைப்பு: மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு!

5 மணி நேரத்தில் 5 ஆயிரம் பனை விதைகளை நட்ட காவல்துறை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)