உறுப்பு செயலிழந்து, இரவல் உறுப்புக்காக மருத்துவமனைப் படுக்கையில், காத்திருப்போரின் பட்டியல் நீண்டு வருகிறது. இதற்குக் காரணம், நோயாளியின் ரத்த வகையை சேர்ந்தவர்களின் உறுப்பையே பொறுத்த முடியும். இந்த நிலையை மாற்ற வருகிறது ஒரு புதிய தொழில்நுட்பம். கனடாவைச் சேர்ந்த மருத்துவர்கள் இந்த உத்தியை உருவாக்கியுள்ளனர். அவர்கள் ஒரு என்சைம் சிகிச்சை வாயிலாக, கிடைக்கும் எந்த ஒரு உறுப்பையும், 'ஓ' வகை ரத்த வகையைச் சேர்ந்த உறுப்பைப் போல மாற்றிவிட முடியும் என்று சாதித்துக் காட்டியுள்ளனர்.
உறுப்பு தானம் (Organ Donate)
பொதுவாக ஓ வகை இரத்தத்தை, யுனிவர்சல் பிளட் குரூப் (Universal Blood Group) என்பர். அதாவது, எவருக்கும் ஓ வகை இரத்தம் ஏற்புடையதாகவே இருக்கும். மனித குடலில் இருக்கும் இரு வகை என்சைம்கள், 'ஏ' ரக ரத்த செல்களை, ஓ ரக ரத்த செல்களாக மாற்றுகின்றன என்பதை ஏற்கனவே ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
இதே முறையில் நீண்ட ஆய்வுகளைச் செய்து, எந்த ரத்தவகையைச் சேர்ந்தவரின் உறுப்பையும், ஓ வகை ரத்தமுள்ள உறுப்பைப் போல மாற்றும் தொழில்நுட்பத்தை கனடா விஞ்ஞானிகள் உருவாக்கினர்.
சோதனைகளில், இத்தகைய உறுப்புக்களை, எந்த வகை மனித உடலும் ஏற்றுக்கொள்ளும் என்பது தெரிய வந்தது. இது நடைமுறைக்கு வந்தால், உலகின் உறுப்புத் தட்டுப்பாடு வெகுவாக குறையும்.
மேலும் படிக்க
காலாவதியான குளிர்பானத்தை வைத்திருந்தாலோ விற்பனை செய்தாலோ அபராதம்!