புதிய நிதியாண்டின் முதல் காலாண்டில், சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இத்தகவலை தெரிவித்துள்ளது.
புதிய நிதியாண்டு (New Financial year)
புதிய நிதியாண்டு ஏப்ரல் 1 இன்று முதல் துவங்குகிறது. இதில், ஜூன் மாதம் வரையிலான முதல் காலாண்டில், என்.எஸ்.சி., எனப்படும் தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம், பி.பி.எப்., எனப்படும் பொது சேமநல நிதி திட்டம் உள்ளிட்ட சிறு சேமிப்பு திட்டங்களுக்கு வழங்கப்படும் வட்டியில், எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
வட்டி விகிதம் (Interest Rate)
பி.பி.எப்.,புக்கு 7.1 சதவீதம் வட்டி தொடர்ந்து வழங்கப்படும். ஒரு ஆண்டுக்கான சேமிப்பு திட்டத்துக்கு 5.5 சதவீத வட்டியும், பெண் குழந்தைகளுக்கான 'சுகன்யா சம்ரீதி' சேமிப்பு திட்டத்துக்கு 7.4 சதவீத வட்டியும் வழங்கப்படும். முதியோருக்கான ஐந்து ஆண்டு சேமிப்பு திட்டத்துக்கு வழங்கப்படும் 7.4 சதவீத வட்டி தொடரும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டியில் மாற்றம் இல்லை என்றாலும், பழைய வட்டியே தொடரும் என்பதால் பொதுமக்கள் ஓரளவுக்கு நிம்மதி அடைந்துள்ளனர்.
மேலும் படிக்க
இல்லம் தேடி வரும் ரேஷன்: பஞ்சாப் முதல்வரின் அதிரடி திட்டம்!
பான் கார்டு, ஆதார் இணைக்கப்பட்டு உள்ளதா: எப்படி தெரிந்துகொள்வது?