இன்ஜின் கெபாசிட்டி, 150CC-க்கு மேற்பட்ட பைக் ஓட்டிச் சென்று விபத்தில் இறந்தால் காப்பீடு தொகை கிடைக்காது என்று தனியார் காப்பீட்டு நிறுவனம் அறிவித்துள்ளது.
காப்பீடு (Insurance)
விபத்தில் இறந்தால், இறந்தவரின் குடும்பத்திற்கு உதவும் விதமாகவே உயிர் காப்பீடு எடுக்கப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, வாகனங்களுக்கு இன்சூரஸ் கட்டாயமாக எடுக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்துகிறது.
3rd பார்ட்டி காப்பீடு (3rd party insurance)
குறிப்பாக, வண்டி, ஓட்டுபவர் மற்றும் எதிரில் வருபவருக்கு என அனைத்திற்கும் காப்பீடு எடுக்க வேண்டும் என்பது கட்டாயம். தற்போது புதிய வாகனம் எடுக்கும் பொழுது 3rd பார்ட்டி என்று சொல்ல கூடிய எதிரில் வருபவருக்கு காப்பீடு 5 வருடங்களுக்கு கட்டாயமாக எடுக்கப்படுகிறது. மேலும், வண்டிக்கு 2 வருடங்கள் கண்டிப்பாக காப்பீடு எடுக்கபடுகிறது.
பம்பர் டு பம்பர் காப்பீடு
பம்பர் டு பம்பர் காப்பீடு எடுத்தால், வண்டி விபத்துக்கு உள்ளானால் அதனை காப்பீடு நிறுவனமே முழுவதுமாக சரி செய்து கொடுக்கும். வண்டியின் வயது அதிகரிக்க அதிர்க்கக் அதன் காப்பீட்டுத் தொகையும் குறையும். மக்களின் பாதுகாப்பிற்காகவே காப்பீடுகளைக் கண்டிப்பாக எடுக்க வேண்டும் என்று அரசு கூறுகிறது.மேலும், மருத்துவ காப்பீடு திட்டத்தையும் அனைவரும் எடுக்கவும் அரசு வலியுறுத்துகிறது.
காப்பீட்டுத் தொகை (Sum Assured)
இதனைக் கருத்தில்கொண்டே, மத்திய-மாநில, அரசுகளே இலவச காப்பீடு திட்டத்தையும் செயல்படுத்துகின்றன. தனியார் நிறுவனங்களும் மருத்துவ காப்பீடு அளித்து வருகின்றன. இதன்படி விபத்தில் ஒருவர் இறந்தால், நாமினியாக இருக்கக் கூடியவர் காப்பீடு நிறுவனத்திடம் இருந்துத் தொகையை பெறலாம்.
அந்த வகையில் கடந்த வருடம் பைக் விபத்தில் இறந்தவரின் குடும்பத்தினர் காப்பீடு நிறுவனத்தில் காப்பீடு தொகையை கேட்டுள்ளனர்.
காப்பீட்டு நிறுவனம் மறுப்பு (Insurance company denial)
இதற்கு அந்த தனியார் காப்பீட்டு நிறுவனம் அளித்த பதிலில், 150 CC வாகனத்தில் சென்று விபத்து ஏற்பட்டு இறந்தால் மட்டுமே இந்த காப்பீடு செல்லுபடி ஆகும், இறந்தவர் 346CC பைக்கில் சென்று இறந்துள்ளார். இதனால் இந்த காப்பீடு செல்லுபடி ஆகாது என்று பதில் அளித்துள்ளனர்.
இதனைக் கேட்டு இறந்தவரின் குடும்பத்தினரை மட்டுமல்லாமல், வாகன ஓட்டிகள் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
மேலும் படிக்க...
பட்டாசு வடிவில் சாக்லேட்டுகள்- தீபாவளியையொட்டி விற்பனை!
அறுவடை நெல் பாதிக்க விடக்கூடாது- அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவு!