Blogs

Friday, 19 August 2022 10:21 PM , by: Elavarse Sivakumar

நம்முடைய செல்போனுக்குப் பயன்படுத்தும், இயர்பட்ஸை சார்ஜ் செய்யாத வகையில், புதிய இயர்பட்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுத்தியுள்ளது, ஸ்வீடனைச் சேர்ந்த 'அர்பனைஸ்டா' நிறுவனம். அதாவது, சூரிய ஒளியை பயன்படுத்திக் கொள்ளும் வகையிலான 'சார்ஜிங் கேஸ்' உடன் கூடிய இயர்பட்ஸ் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

அர்பனைஸ்டா போனிக்ஸ்' எனும் பெயரில், புதிதாக ஒரு ட்ரூ ஒயர்லெஸ் ஸ்டீரியோ இயர்பட்சை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த இயர்பட்சுக்கான சார்ஜிங் கேஸ், சூரிய ஒளியை பயன்படுத்தி சார்ஜ் பெற்றுக்கொள்ளும் என்பது முக்கியமான அம்சமாகும்.

சார்ஜிங் வேண்டாம்

இதனால், சார்ஜிங் கேஸை நாம் தனியாக சார்ஜ் போடத் தேவையில்லை.
எப்போதெல்லாம் அதற்கு ஒளி கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் அதுவாகவே சார்ஜை ஏற்றிக்கொள்ளும். இதில், 'டச் கன்ட்ரோல் வாய்ஸ் அசிஸ்டென்ட்' போன்ற வசதிகளும் இடம்பெற்றிருக்கின்றன. 40 மணி நேரம் தாங்கும் பேட்டரி வசதியும் உள்ளது.

தரச்சான்றிதழ்

மேலும், ஹைபிரிட் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன்' தொழில்நுட்ப வசதி இருப்பதால், எளிதாக சுற்றுப்புற சப்தங்களை கட்டுப்படுத்திக் கொள்ள இயலும். இதில்  யு.எஸ்.பி., டைப் சி போர்ட்' சார்ஜிங் வசதியும் உள்ளது. மேலும் நீர்புகாமலிருக்க 'ஐ.பி.எக்ஸ்., 4 தரச்சான்றிதழும் பெற்றுள்ளது.

இந்த இயர்பட்ஸ், அக்டோபர் மாத வாக்கில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தோராய விலை: 11,800 ரூபாய்.

மேலும் படிக்க...

தேசத்தின் சிறந்த முதல்வர்கள் பட்டியல் - 3ம் இடத்தில் மு.க.ஸ்டாலின்!

ஆதரவற்றப் பெண்களின் திருமணத்துக்கு ரூ.50,000 நிதியுதவி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)