ஒரே பிரசவத்தில் ஒரு பெண் 9 குழந்தைகளைப் பெற்றிருப்பது, உலகளவில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாய்மையின் மகத்துவம் (The greatness of motherhood)
மகப்பேறு என்பது மறுஜென்மம் என்பார்கள். பத்து மாதங்கள் கற்பத்தில் சுமந்து ஒரு குழந்தையை, இந்த உலகிற்கு நம்மைப் பாதுகாப்பாகக் கொண்டுவர அந்தத் தாய் எதிர்கொள்ளும் சவால்கள் எண்ணிலடங்கா.
ஒரு குழந்தைக்கே பல சிக்கல்களைச் சந்திக்க வேண்டிய நிலையில், இரட்டைக் குழந்தைகள் என்றால், இரட்டிப்பான வேதனையை அந்தத் தாய் அடைய நேரிடும்.
இரட்டைக் குழந்தைகள் (Twins)
பொதுவாக ஒரு கருவில் இரண்டு குழந்தைகள் உருவாவதுண்டு. அதையும் மீறி சில நேரங்களில் மூன்று, நான்கு கூட உண்டாகும். அப்படி உண்டாகும்போது அனைத்து குழந்தைகளும் உயிர் பிழைப்பதில்லை. அபூர்வமாக நான்கு குழந்தைகளுக்கு மேலும் உருவாகும் நிகழ்வும் நடந்துள்ளது.
9 குழந்தைகள் (9 children)
இதையெல்லாம் மீறி ஆப்பிரிக்க நாடான மாலியைச் சேர்ந்த பெண்ணிற்கு ஒரு கருவில் 9 குழந்தைகள் உருவாகி, தற்போது அறுவை சிகிச்சை மூலம் 9 குழந்தைகளையும் பெற்றெடுத்தார்.
ஏழு குழந்தைகள்(7 children)
அவர் கர்ப்பமாக இருந்தபோது மருத்துவமனையில் பரிசோதனைக்கு சென்றுள்ளார். அப்போது ஸ்கேன் எடுத்து பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில் கருவில் ஏழு குழந்தைகள் உருவாகியிருந்தது தெரியவந்தது.
மொரோக்கோவில் பிரசவம் (Childbirth in Morocco)
இதனால் ஹலிமா சிஸ் என்ற 25 வயதான அந்த இளம் பெண்ணுக்கு ஆரோக்கியமாக குழந்தைகள் பிறக்க மருத்துவர்கள் முக்கிய கவனம் செலுத்தினர். குழந்தைகள் ஆரோக்கியத்துடன் பிறப்பதற்கும், இந்த பெண்ணின் உடல்நலத்தை கருத்தில் கொண்டும் மொரோக்கோவிற்கு அழைத்துச் சென்று பிரசவம் பார்க்க வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தினர்.
பேரின்ப அதிர்ச்சி (Blissful shock)
பின்னர் அரசு உதவியுடன், அந்த பெண் மொரோக்கோவிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் நடைபெற்றது. அப்போது மருத்துவர்களுக்கு பேரின்ப அதிர்ச்சி காத்திருந்தது. என்னவென்றால், அவரது கருப்பையில் 9 குழந்தைகள் இருந்தன. 9 குழந்தைகளையும் அறுவை சிகிச்சை மூலம் எடுத்தனர்.
5 பெண் குந்தைகள் (5 Girl babies)
இதில் நான்கு ஆண் குழந்தைகளும், ஐந்து பெண் குழந்தைகளும் அடங்கும். 9 குழந்தைகள் என்பதாலும், குழந்தைகள் ஆரோக்கியத்துடன் இருப்பது கடினம், என்பதாலும் பல நாட்கள் மொரோக்கோவில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றபின், மாலி திரும்ப இருக்கிறார்.
மேலும் படிக்க...
8 ஆசிய சிங்கங்களுக்கும் கொரோனா- தனி கூண்டில் தனிமைப்படுத்தப்பட்டன!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் ரூ.7,000? முழு விபரம் உள்ளே!