Blogs

Friday, 10 April 2020 11:31 AM , by: Anitha Jegadeesan

நீலகிரி மாவட்டத்தில் விவசாயிகள் நலன் கருதி உற்பத்தி செய்த விளை பொருட்களை எளிதில் சந்தைப்படுத்த மாவட்ட ஆட்சியர் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதற்காக அம்மாவட்ட தோட்டக்கலை துறையினர் தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொண்டர்.  

நீலகிரி மாவட்டத்தில் வேளாண்மை என்பது பிரதான தொழிலாகும். இங்கு 20,000 ஏக்கர் பரப்பளவில் மலை காய்கறிகள் சாகுபடியாகின்றன. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு இங்கிருந்து தான் மலை காய்கறிகளான கேரட், முள்ளங்கி, முட்டை கோஸ் போன்றவை விநியோகிக்க பட்டு வருகின்றன. கரோனா தடை உத்தரவின் காரணமாக அறுவடை செய்த காய்கறிகளை விற்பனை செய்ய இயலாமல் அவதிப்பட்டு வருகின்றனர். தற்போது தோட்டக்கலை துறை, விளைபொருட்களை சந்தைப்படுத்துவதற்கு தேவையான  நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

 தோட்டக்கலை துறையின் கீழ் செயல்பட்டு வரும், 500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்சாதன கிடங்களில்  விவசாயிகள் தங்களது விளைபொருட்களை சேமித்து வைத்து கொள்ளலாம். மேலும் அந்தந்த  பகுதிகளில் உள்ள உழவர் சந்தைகளில் நேரடியாக தங்களது விளைப்பொருட்களை விற்பனை செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது  பயன்பாட்டில் இருந்து வரும்  முதன்மை பதனிடும் நிலையங்களில் உள்ள குளிர்சாதன கிடங்கையும் தற்சமயம் இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உதவி எண்கள்

நீலகிரி மாவட்டத்தை சார்ந்த விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை சந்தைப்படுத்துவதாக இருப்பின் அந்தந்த பகுதியை சார்ந்த தோட்டக்கலை துறை உதவி இயக்குனர்களை அணுகலாம்.

ஊட்டி – 94881 33695,

குன்னுார் – 63819 63018,

கோத்தகிரி – 94864 12544, 94870 27087,

கூடலூர் – 89034 47744

மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 1077 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)