ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) டிஜி லாக்கர் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளது. பிஎஃப் உறுப்பினர்கள் இப்போது டிஜிலாக்கர் சேவையின் மூலம் தங்கள் முக்கியமான கோப்புகளை அணுகலாம் என்று அறிவித்துள்ளது. தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் இபிஎஃப்ஓ இதுகுறித்து விளக்கமளித்துள்ளது.
டிஜி லாக்கர் (Digilocker)
EPFO வெளியிட்ட பதிவில், “உறுப்பினர்கள் டிஜிலாக்கர் மூலம் யுஏஎன் கார்டு, பென்ஷன் பேமென்ட் ஆர்டர் (பிபிஓ) மற்றும் திட்டச் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்யலாம். அனைத்து ஆவணங்களும் டிஜிலாக்கரில் பதிவிறக்கம் செய்யப்படுகின்றன என்று தெரிவித்துள்ளது.
UAN என்பது ஒரு முக்கியமான ஆவணமாகும், இது சம்பளம் பெறும் ஊழியர்கள் தங்கள் பல்வேறு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்குகளை கண்காணிக்க பயன்படுத்த முடியும். இதே போல் ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் ஓய்வூதியத்தைப் பெற அவர்களின் 12 இலக்க ஓய்வூதியக் கொடுப்பனவு ஆணை (PPO) எண்ணைக் கொண்டிருக்க வேண்டும்.
இதன் காரணமாக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) EPS சான்றிதழை வழங்குகிறது, இது வருங்கால வைப்பு நிதி உறுப்பினரின் சேவை வரலாறு பற்றிய தகவல்களைக் கொண்டுள்ளது. பணிபுரிந்த ஆண்டுகளின் எண்ணிக்கை, குடும்பத் தகவல்கள் மற்றும் பணியாளர் இறந்தால் ஓய்வூதியம் பெறத் தகுதிபெறும் குடும்ப உறுப்பினர் உள்ளிட்ட நபரின் சேவை குறித்த தகவல்கள் அதில் இடம்பெற்றிருக்கும்..
DigiLocker என்பது “டிஜிட்டல் இந்தியா” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் முதன்மையான திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது..
மேலும் படிக்க
தமிழக மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி: போக்குவரத்து துறை சேவைக்கட்டணங்கள் 10 மடங்கு உயர்வு!
அரசு ஊழியர்களுக்கு நற்செய்தி: இனி இவர்களுக்கு முழு சம்பளம் தான்!