Blogs

Monday, 10 February 2020 02:05 PM , by: Anitha Jegadeesan

பிரதான மந்திரியின் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் "ஒவ்வொரு துளி நீரிலும் அதிக பயிர் சாகுபடி" என்ற நோக்கத்தில் அனைத்து வகையான நீர்ப்பாசன வசதிகளை பெறுவதற்கும், அதற்கான கருவிகளை பெறுவதற்கும் 75 சதவிகிதம் முதல் 100 சதவிகிதம் வரை மானியம் வழங்கி வருகிறது. இத் திட்டத்தின் கீழ் தற்போது முதன் முறையாக கரும்பு பயிருக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க ரூ.1.62 லட்சம் மானியம் வழங்கப்பட உள்ளது. கரும்பு விவசாயிகள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் மட்டும் 120 ஹெக்டேர் அளவிற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும், பெரு விவசாயிகளுக்கு 75 சதவீதமும் மானியம் வழங்கப்படுகிறது. எனவே பதிவு செய்யும் அனைத்து கரும்பு விவசாயிகளுக்கும் மானியம் வழங்க பட ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

இதுவரை இத்திட்டத்தில் 49 ஹெக்டேர் வரை மானியம் வழங்கப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கைவிட கூடுதலான விவசாயிகள் விண்ணப்பிக்கும் பட்சத்தில்,  அனைத்து விவசாயிகளும் பயனடையும் வகையில் மானியம் பெற்றுத்தரப்படும் என தோட்டக்கலைத் துறை சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. கரும்பை பொறுத்தவரை நடவிற்கு முன்பே சொட்டுநீர் பாசனம் அமைக்க வேண்டும் என்பதால் விவசாயிகள் காலம் தாழ்த்தாது விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)