ஒடிசாவைச் சேர்ந்த சிறுமி, ஒலிம்பிக் போட்டிகள் மீதான ஆர்வத்தால், ஐஸ்கிரீம் குச்சிகளைக் கொண்டு உருவாக்கியுள்ள மினி டோக்கியோ ஒலிம்பிக் மைதானம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
விளையாட்டு (Sports)
விளையாட்டில் சாதிப்பது என்பது அனைவருக்குமே சாத்தியமல்ல. அதன் மீதுத் தனியாதத் தாகமும், சாதிக்க வேண்டும் என்ற வெறியும் கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமே வசப்படும். அதற்காக, வருடம் முழுவதும் அர்ப்பணிப்போடுடன் கூடிய முயற்சியில் ஈடுபடும்போது, நிச்சயம் இலக்கை அடைய முடியும்.
ஒலிம்பிக் கனவு (Olympic dream)
அந்த வகையில் விளையாட்டு வீரர்கள் ஒவ்வொருவரின் உச்சக்கட்ட இலக்கும் ஒலிம்பிக்தான். ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே கனவு என்ற போதிலும், வாழ்வில் ஒருமுறையாவது ஒலிம்பிக்கில் நம் நாட்டிற்காக விளையாட வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டிருப்பர்.
டோக்கியோ ஒலிம்பிக் (Tokyo Olympics)
அத்தகையோர் பங்கேற்கும் உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் (Olympic) போட்டித் தொடர், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் (Tokyo) கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், இந்தியா சார்பில் இதுவரை இல்லாத அளவுக்கு 125 வீரர், வீராங்கனைகள் பதக்கம் வெல்லும் முனைப்புடன் களமிறங்கியுள்ளனர்.
ஒத்திவைப்பு (Postponement)
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஒலிம்பிக் போட்டி, கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. கொரோனா அச்சுறுத்தல் நீடிப்பதால், ஜப்பான் மக்கள் இந்த ஆண்டும் ஒலிம்பிக் போட்டியை நடத்த எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் நிலையில், அந்நாட்டு அரசும் சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பும் உறுதியுடன் செயல்பட்டு போட்டியை நடத்துகின்றன.
205 நாடுகள் (205 countries)
மொத்தம் 205 நாடுகளைச் சேர்ந்த 11,683 வீரர், வீராங்கனைகள் 33 போட்டிகளில் தலா 339 தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களுக்காகத் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மினி ஒலிம்பிக் மைதானம் (Mini Olympic Stadium)
இந்நிலையில் ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு ஒடிசாவைச் சேர்ந்த சிறுமி, ஐஸ்குச்சிகளைக் கொண்டு மினி ஒலிம்பிக் மைதானத்தை உருவாக்கி அசத்தியுள்ளார்.
ஒடிசாவில் பூரி நகரை சேர்ந்த சிறுமி நந்தினி பட்னாயக் (வயது 14). இவர், ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டுள்ள இந்திய விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு அர்ப்பணிக்கும் நோக்கில் இதனை அவர் தயாரித்து உள்ளார்.
10,000 ஐஸ்குச்சிகள் (10,000 ice creams)
இதுபற்றி சிறுமி நந்தினி பட்னாயக் கூறுகையில், ஏறக்குறைய 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ஐஸ்கிரீம் குச்சிகள் எனக்கு தேவைப்பட்டது.
அவற்றைக் கொண்டு மினி ஒலிம்பிக் மைதானம் ஒன்றை உருவாக்கி உள்ளேன். நம்முடைய விளையாட்டு வீரர்களுக்கு மரியாதை சேர்க்கும் வகையில் இதனை அமைத்திருக்கிறேன்.
இவ்வாறு நந்தினி பட்னாயக் தெரிவித்து உள்ளார்.
வீரர்களுக்கு மரியாதை (Respect for the players)
நாம் உண்டு, நம் வேலை உண்டு என்று இருப்பவர்களுக்கு மத்தியில், இந்திய வீரர்களை ஊக்குவிக்கும் வகையிலும், மரியாதை செலுத்தும் விதமாகவும் செயல்பட்டுள்ள நந்தினியின் முயற்சி பாராட்டுதற்குரியது.
மேலும் படிக்க...
இளமையில் டீ விற்ற ரயில்வே வாட்நகர் இரயில் நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி