இராணுவத்தில், 'ஒரே பதவி; ஒரே ஓய்வூதியம்' என்ற மத்திய அரசின் திட்டத்தை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இராணுவத்தினருக்கான, ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்தை மத்திய அரசு 2015ல் அறிவித்தது. 'இத்திட்டத்தின் கீழ், ஓய்வூதியம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்படும்' என அறிவிக்கப்பட்டது. ஆனால், 'இதை ஆண்டுதோறும் மாற்றியமைக்க உத்தரவிட வேண்டும்.
ஓய்வூதிய திட்டம் (Pension Scheme)
2013ம் ஆண்டை அடிப்படையாக வைத்து ஓய்வூதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதை, 2014ம் ஆண்டை அடிப்படையாக வைத்து மாற்றியமைக்க உத்தரவிட வேண்டும்' என, முன்னாள் வீரர்கள் இயக்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், உச்ச நீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவு: மத்திய அரசு ஒரு கொள்கை முடிவை எடுத்துள்ளது. அத்தகைய முடிவு அரசாங்கத்தின் கொள்கை வகுப்பதற்கான அதிகார வரம்பிற்குள் உள்ளது.
எனவே மத்திய அரசு வகுத்த திட்டத்தை நீதிமன்றம் உறுதி செய்கிறது. ஐந்தாண்டுகள் முடிவடைந்த பின்னரும், இந்த வழக்கு நிலுவையில் உள்ளதால், ஒரே பதவி; ஒரே ஓய்வூதியம்'திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள மறுசீரமைப்பு பணியை, 2019 ஜூலை 1 முதல் மேற்கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் படிக்க
பென்சன் வாங்குவோருக்கு நல்ல செய்தி: புதிய விதிமுறைகள் அறிமுகம்!
LIC பாலிசிதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு: மார்ச் 25 வரை கால அவகாசம்!