நாடு முழுவதும் வெங்காயம் விலை உயர்ந்ததை தொடர்ந்து, வெங்காய உற்பத்தியை அதிகரிக்க அரசு தேவையான முயற்சி மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி, தா.புதுக்கோட்டை, கள்ளிமந்தயம், கரியாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பெருமளவில் வெங்காய சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
தற்போது ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி ஒன்றிய பகுதிகளில் சாகுபடி செய்துள்ள வெங்காய பயிரில் வேர்ப்புழு தாக்குதல் ஏற்பட்டு பயிர்கள் வாடி வருகின்றன. இதிலிருக்கும் புழுக்கள் ஒரு செடியில் இருந்து எளிதில் மற்றொரு செடிக்கு எளிதாக பரவி விடுவாதல் விளைச்சல் பாதிக்கும் சூழல் உருவாகி உள்ளது.
வேளாண் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பயிர்களை விரைவில் ஆய்வு செய்து போதிய ஆலோசனைகளை வழங்க உடனடியாக வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.