சென்னை உயர்நீதிமன்ற ஆலோசனையின் படி தற்கொலையை தடுக்கும் விதமாக ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளயாட்டுகளுக்கு தடை விதித்து தமிழக அரசுஅவசர சட்டம் பிறப்பித்துள்ளது.
கவர்ச்சிகரமான விளம்பரங்கள் (Attractive ads)
கவர்ச்சிகரமான விளம்பரங்களால் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளில் விழுந்து, அதிகப் பணத்தை இழப்பதுடன் மன நிம்மதி இழந்து தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள்அதிகரித்து வருகிறது.
இணையதளம் வாயிலாக விளையாடும் இந்த விளையாட்டின் பக்கம், இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் ஈர்க்கப்பட்டு, அதில் தங்கள் நேரம் முழுவதையும் செலவிடும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
தற்கொலை (Suicide)
அவ்வாறு அடிமையாகும் சிலர், இறுதியில், தற்கொலை முடிவைக் கையில் எடுத்துக்கொள்கின்றனர்.
நீதிமன்ற உத்தரவு (Court order)
இது குறித்து சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், உரிய விளக்கம் அளிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டிருந்தனர்.
இதையடுத்து, அரசு சூதாட்டவிளைாட்டுகளுக்கு தடை விதித்து அவசர சட்டம் பிறப்பித்தது. ஆனால் அரசின் தடை விதிப்புக்கு சூதாட்ட விளையாட்டு நடத்தும் நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்தன.
அரசு பதில் (Government Statement)
இதற்கு பதில் அளித்து அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் தெரிவித்து இருப்பதாவது:
நீதிமன்ற ஆலோசனையின் படி தற்கொலையை தடுக்கும் விதமாக ஆன்லைன் ரம்மி, போக்கர் உள்ளிட்ட சூதாட்ட விளயாட்டுகளுக்கு தடை விதித்து அவசர சட்டம் பிறப்பித்தது.
மேலும் பணம் வைத்து விளையாடுவதற்கு மட்டுமே அவசர தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அரசின் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
2024ம் ஆண்டு வரை போராடத் தயார் : விவசாய சங்கத்தினர் அறிவிப்பு!
குளிர்கால நோய்களில் இருந்துத் தப்பிக்க வேண்டுமா? இது மட்டும் போதும்!
சூரிய ஒளி மின்வேலி திட்டம்- மானியம் பெறுவது எப்படி?