இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 23 May, 2022 1:03 PM IST

அமெரிக்கா செல்ல விசா கிடைக்காததால் தியேட்டரில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் தங்கள் மகனின் திருமணத்தைக் காணும் பாக்கியம் இந்தப் பெற்றோருக்குக் கிடைத்தது. எனவே அமெரிக்காவில் நடைபெற்ற திருமணத்திற்கு பெற்றோர் ஆன்லைனில் வாழ்த்து தெரிவித்தனர். உறவினர்களுக்கு இந்தியாவில் விருந்து பரிமாறப்பட்டது. 

காதல் திருமணம் (Love marriage)

ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்தவர் பர்வத ரெட்டி, ஜோதி தம்பதியரின் மகன் ரோஷித் ரெட்டி. இவர் அமெரிக்காவில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார். திருப்பதியை அடுத்த நாயுடு பேட்டை சேர்ந்த சீனிவாஸ் ரெட்டி, சுனிதா தம்பதியினரின் மகள் ரிஷிதா. அமெரிக்காவில் எம்.பி.ஏ படித்து வருகிறார். ரோஹித் ரெட்டி, ரிஷிதா இருவரும் அமெரிக்காவில் காதலித்து வந்தனர். இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்து தங்களது பெற்றோருக்கு தெரிவித்தனர்.இருவரது பெற்றோர்களும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.

விசா கிடைக்கவில்லை

மே 22-ந் தேதி அமெரிக்காவில் திருமணம் நடத்த முடிவு செய்து பத்திரிகை அடித்து உறவினர்கள் நண்பர்களுக்கு கொடுத்தனர். அமெரிக்காவில் நடைபெறும் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக மணமக்களின் பெற்றோர் விசாவுக்கு விண்ணப்பித்தனர். விசா கிடைக்காததால் திருமணத்தில் கலந்து கொள்ள முடியாததால் மணமக்களின் பெற்றோர் விரக்தி அடைந்தனர்.

இதையடுத்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் திருமணத்தை நடத்த இருவீட்டாரின் பெற்றோர்களும் முடிவுசெய்தனர். மீண்டும் திருமண பத்திரிகை அடித்து உறவினர்கள் நண்பர்களுக்கு கொடுத்தனர். நாயுடு பேட்டையில் புதியதாக கட்டப்பட்டுள்ள பாகுபலி சினிமா தியேட்டரை வாடகைக்கு எடுத்தனர். திரையரங்கம் வெளியில் வாழை மரங்கள் தோரணங்கள் கட்டப்பட்டு திருமண மண்டபம் போல் காட்சி அளித்தது. அங்கு நேற்று அதிகாலை வீடியோ கான்பரன்ஸ் மூலம் நீண்ட திரையில் மணமக்கள் பட்டு உடை உடுத்தி மணக்கோலத்தில் மணமேடைக்கு வரும் காட்சிகள் திரையிடப்பட்டன. புரோகிதர்கள் யாகம் வளர்த்து மந்திரங்கள் ஓத மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்டினார். மணமக்களின் பெற்றோர் ஆனந்த கண்ணீர் வடித்தபடி மணமக்களை வாழ்த்தினார். 

அறுசுவை விருந்து

திருமண நிகழ்ச்சி முழுவதையும் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் கண்டு ரசித்தனர். இந்த நிகழ்வு திருமணத்தில் நேரடியாக கலந்து கொண்ட உணர்வு ஏற்படுத்தியதாக திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அறுசுவை விருந்து பரிமாறப்பட்டது.

மேலும் படிக்க...

ஆதார் மூலம் வருமானம்… அடடே, சூப்பர் Offer?

ரூ.1லட்சம் பென்சன் தரும் மத்திய அரசின் மகத்தானத் திட்டம்!

English Summary: Online Wedding - Banquet for Relatives at the Cinemat Theater!
Published on: 23 May 2022, 12:59 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now